Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவின் சதி.. போகிற போக்கில் வாயை விட்ட இம்ரான்.. பாய்ந்து வந்த வெள்ளை மாளிகை.. பளீர் பதிலடி!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தன்னுடைய ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் சதி செய்ததாக இம்ரான் கான் குற்றச்சாட்டி உள்ளார். அமெரிக்காவை பற்றி இவர் தாக்கி பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் வெள்ளை மாளிகை இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

Recommended Video

    Pakistan Prime Ministers-ன் Worst History! Imran Khan-ம் Listல் இருக்கார் | OneIndia Tamil

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அறிவித்துவிட்டார். அதோடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் என்று அறிவித்துவிட்டார்.

    பாகிஸ்தானில்இம்ரான் கான் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. ஏற்கனவே அக்கட்சியின் எம்பிக்கள் 22 பேர் கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர் . நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் அவரின் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

    சர்வதேச அதி

    சர்வதேச அதி

    இந்த நிலையில்தான் தன்னுடைய ஆட்சிக்கு எதிராக சர்வதேச சதி இருப்பதாக இம்ரான் கான் தெரிவித்துவந்தார் . நேற்றும் தன்னுடைய பேச்சில் சர்வதேச சதி பற்றி இம்ரான் கான் பேசினார். ஒரு வெளிநாட்டு அரசு தன்னை ஆட்சியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாகவும். தன்னுடைய வெளியுறவுக்கொள்கை பிடிக்காமல் தன்னை வெளிநாட்டு அரசு ஒன்று ஆட்சியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாக அவர் கூறினார்.

    வெளிநாட்டு அரசு

    வெளிநாட்டு அரசு

    வெளிநாட்டு அரசு ஒன்று எங்களுக்கு மெசேஜ் அனுப்பியது. அதில் என்னை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியது. மார்ச் 7ம் தேதி இந்த மெசேஜ் எங்களுக்கு வந்தது. அமெரிக்கா அனுப்பிய அந்த மெசேஜில்.. இல்லை அமெரிக்கா இல்லை.. ஒரு வெளிநாட்டு அரசு அனுப்பிய அந்த மெசேஜில் என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. நான் இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் ஒரு சுதந்திர நாடு வேறு ஒரு வெளிநாட்டில் இருந்து இப்படி மிரட்டலை எதிர்கொள்வது தவறானது.

    நாட்டிற்கு எதிரானது

    நாட்டிற்கு எதிரானது

    அது எனக்கும், என் நாட்டிற்கும் எதிரானது. என்னுடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டால் பாகிஸ்தான் தப்பிக்கும். இல்லை என்றால் பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும் என்று அந்த மெசேஜில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது என்று இம்ரான் கான் தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தார். நான் ரஷ்யா சென்றது தவறு என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    ரஷ்யா செல்லும் முடிவு

    ரஷ்யா செல்லும் முடிவு

    நான் சுயமாக ரஷ்யா செல்லும் முடிவை எடுத்ததாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நான் எங்கள் நாட்டு அரசு நிர்வாகிகள், வெளியுறவுத்துறை, அந்த குறிப்பிட்ட நாட்டின் தூதரகத்துடன் ஆலோசனை செய்த பின்பே ரஷ்யா சென்றேன். ஆனாலும் நான் ரஷ்யா சென்றதை விமர்சித்து என் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள்.

    இம்ரான் கான் அமெரிக்கா

    இம்ரான் கான் அமெரிக்கா

    நாட்டின் எதிர்க்கட்சிகள் வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து இந்த சதியில் ஈடுபட்டு வருகின்றன, என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டார். இம்ரான் கான் தனது உரையில் வாய் தவறி அமெரிக்கா சதி என்று கூறினார். அதன்பின் சுதாரித்துக்கொண்டு அமெரிக்கா இல்லை. ஒரு வெளிநாட்டு அரசு என்று இம்ரான் தெரிவித்தார். வெளிநாட்டு அரசின் அந்த கடிதம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    கடிதம்

    கடிதம்

    அந்த கடிதத்தில் இருந்த விவகாரங்களை கடந்த வாரம் இம்ரான் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இம்ரான் கான் ரஷ்யா - உக்ரைன் போருக்கு முதல் நாள் ரஷ்யா சென்றார். அங்கு புடினை சந்தித்தார். இந்த நிலையில்தான் அமெரிக்கா இவர் மீது கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுவே அவரின் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட காரணம் என்றும் தற்போது விவாதம் எழுந்துள்ளது. ஆனால் வெள்ளை மாளிகை தற்போது இதை மறுத்துள்ளது.

    வெள்ளை மாளிகை

    வெள்ளை மாளிகை

    இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்களை கவனித்து வருகிறோம். பாகிஸ்தான் நாட்டில் சட்ட ரீதியாக நடக்கும் விஷயங்களை ஆதரிக்கிறோம். அவர்கள் சட்டத்தை பின்பற்றி செய்யும் விஷயங்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம். பாகிஸ்தானின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+