அமெரிக்காவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை.. ஈரானுக்கு பறந்த பாகிஸ்தான் டீம்! அடுத்து என்ன நடக்கும்?
தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த, பாகிஸ்தான் டீம் ஈரானுக்கு செல்ல இருக்கிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை வகுப்பதற்காக, ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தலைமையிலான உயர்மட்ட பாகிஸ்தான் தூதுக்குழு தெஹ்ரான் செல்கிறது என்று ஈரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

அமெரிக்காவின் புதிய செய்தியைத் எடுத்து செல்லும் இந்தத் தூதுக்குழு, ஈரானிய அதிகாரிகளுடனான சந்திப்புகளில் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐ.ஆர்.ஐ.பி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தத் தூதுக்குழுவை வரவேற்க உள்ளார். அமெரிக்காவும் ஈரானும் தங்கள் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தின. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை.
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கப்பட்ட கிட்டத்தட்ட 40 நாள் போரைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலையும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் சொத்துக்களையும் குறி வைத்து தாக்கியிருந்தது. இது மத்திய கிழக்கை தாண்டி, உலகம் முழுவதும் பதற்றத்தையும் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பபையும் ஏற்படுத்தியிருந்தது.
எனவே போரை நிறுத்த பல்வேறு தரப்பினரும் தீவிரமாக முயன்று வருகின்றனர். அமெரிக்கா, பாகிஸ்தான் மூலம் ஈரானை அப்ரோச் செய்து வருகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கும் நிலையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த, பாகிஸ்தான் குழு தெஹ்ரானுக்கு செல்ல இருக்கிறது.
அடுத்து என்ன நடக்கும்?
இந்த பேச்சுவார்த்தை முயற்சியை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்வதெனில், ஈரான் தரப்பிலும் சில டிமாண்ட்கள் வைக்கப்படும். இதை அமெரிக்கா ஏற்க தயாராக இருக்கிறது, அல்லது அது குறித்து பேச தயாராக இருக்கிறது எனில், பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒப்புக்கொள்ளும்.
குறிப்பாக வெளிநாட்டில் உள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றும், போர் நிறுத்தம் ஈரானை தாண்டி லெபனான் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்கிற வலியுறுத்தலை ஈரான் வைக்க வாய்ப்பு இருக்கிறது.
-
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்!












Click it and Unblock the Notifications