அனுபம் கெருக்கு விசா தர மறுத்த பாகிஸ்தான்... பாதுகாப்பு காரணத்திற்காகவாம்!
லாகூர்: பாதுகாப்பு காரணங்களுக்காக பிரபல இந்தி நடிகர் அனுபம் கெருக்கு பாகிஸ்தான் விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, தங்களது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல நடிகர் அனுபம் கெருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று அனுபம் கெரும் பாகிஸ்தான் செல்ல ஆர்வமாக இருந்தார்.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அவருக்கு விசா தர மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அனுபம் கெர் கூறுகையில், "நான் பாகிஸ்தான் செல்வதற்கு தயாராக இருந்தேன், ஆனால் தொழில்நுட்ப காரணமாக இது நடைபெறாது என்று எனக்கு அழைப்பு விடுத்தவர்கள் தெரிவித்து உள்ளனர்" என்றார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் செய்தி நாளிதழான எக்ஸ்பிரஸ் டிரிபுயூன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பெஷாவர் ராணுவ பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக அனுபம் கெர் தெரிவித்த கருத்தை குறிப்பிட்டு உள்ளது. அதாவது, பாகிஸ்தான் பள்ளித் தாக்குதலின் போது, ‘இந்தியா, பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் தீவிரவாதம் தற்போது மிகவும்பாதிக்கும் சூழ்நிலையில் உள்ளது,' என அனுபம் கெர் தெரிவித்து இருந்தார்.
மேலும், ‘தீவிரவாதத்தின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது, மனிதாபிமானம் இல்லாமல் குழந்தைகளை கொல்வது என்னை மிகவும் பாதித்துவிட்டது... தீவிரவாத தாக்குதலில் 150 குழந்தைகள் கொல்லப்பட்டது என்னை பெரிதும் பாதித்துவிட்டது,' என்றும் அனுபம் கெர் தெரிவித்ததாக அப்பத்திரிக்கையில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications