பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை
இஸ்லாமாபாத்: ஈரான்-அமெரிக்கா போரில், மத்தியஸ்தம் செய்வதற்காக பாகிஸ்தானை அமெரிக்கா நியமித்திருந்தது. அமெரிக்கா கொடுக்கும் டீலை, ஈரானை ஏற்றுக்கொள்ள வைப்பதுதான் பாகிஸ்தானின் வேலை. ஆனால், இதில் பாக், சொதப்பியிருப்பதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளதை 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் ஏற்க மறுத்துள்ளது. பாகிஸ்தானை வைத்து முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

பாகிஸ்தான் மற்றும் சமரச முயற்சிகள்
பாகிஸ்தான் வழங்கிய சமரச முயற்சிகள் தோல்வியடைந்தது, அந்நாடு எந்த மாதிரியான முயற்சிகளை எடுத்தது என்கிற கேள்விகளை எழுப்பியிருக்கிறது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார், இது குறித்து கூறுகையில் “பயனுள்ள பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதில் பெருமைப்படுவோம்” என்று சிம்பிளாக கருத்து தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.
இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அதிகாரிகளை சந்திக்க ஈரான் விரும்பவில்லை என்றும், அமெரிக்காவின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் பாகிஸ்தானிடம் ஈரான் தெரிவித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டது.
டிரம்ப் மற்றும் ஈரானின் நிலைப்பாடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில்தான் ஈரானுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி இருக்கையில், ஈரான் வெளிப்படையாக பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருப்பதாக கூறியிருப்பது, டிரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பையில் உள்ள ஈரானிய துணைத் தூதரகம் சார்பில் X தளத்தில் வெளியான அறிக்கையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாபி,
“அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை. பாகிஸ்தானில் நடக்கும் பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கேற்கவில்லை. டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து 15 அம்சத் திட்டம், யதார்த்தமானது அல்ல. அது நியாயமற்றது. போரை முடிவுக்குக் கொண்டு வர பிராந்திய நாடுகள் விடுக்கும் அழைப்புகளை வரவேற்கிறோம். ஆனால், யார் போரை ஆரம்பித்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு!












Click it and Unblock the Notifications