2 ஆக உடையும் பாகிஸ்தான்? இந்தியா அருகே உருவாகும் புதிய நாடு? பார்லிமென்ட் டூ ஐநா வரை போன மேட்டர்..
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் கடந்த 1971ம் ஆண்டில் இந்தியா உதவியுடன் தனிநாடாக பிரிந்தது. இப்போது 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாகிஸ்தான் 2 துண்டாக உடைகிறதா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் எம்பி மவுலாானா ஃபஸ்ல் உர் ரஹ்மான் உதிர்த்த வார்த்தைகள் தான். அப்படி என்ன நடந்தது? பாகிஸ்தான் இரண்டாக உடைய வாய்ப்பு உள்ளதா? பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக பலூசிஸ்தானின் தனிநாடு கோரிக்கை பற்றிய முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
நம் நாட்டில் இருந்த பிரிந்து தனிநாடாக போனது தான் பாகிஸ்தான். அதன்பிறகு 1971 வரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தான் தனியாக பிரிந்தது. அதுதான் தற்போதைய வங்கதேசம். வங்கதேசம் தனிநாடு கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் நம் நாட்டு ராணுவ வீரர்கள் தான் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை சரணடைய வைத்து வங்கதேசத்தை உருவாக்கினர்.

வங்கதேசம் உருவாகி தற்போது 54 ஆண்டுகள் ஆகிறது. இப்படியான சூழலில் தான் பாகிஸ்தான் மீண்டும் 2 ஆக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் நாட்டில் மிகப்பெரிய மாகாணமாக பலூசிஸ்தான் உள்ளது. பாகிஸ்தானை எடுத்து கொண்டால் 4 மாகாணங்கள் உள்ளன.
இதில் பலூசிஸ்தான், ஹைபர் பக்துன்க்வா, பஞ்சாப், சிந்து உள்ளிட்டவை அடங்கும். பாகிஸ்தானில் பலூசிஸ்தான் தான் மிகப்பெரிய மாகாணம். நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 43 சதவீதம் இங்கே இருக்கிறது. நிலப்பரப்பில் பெரிய மாகாணமாக இருந்தாலும் கூட இங்கு மொத்தம் பலூசிஸ்தானில் 1.5 கோடி மக்கள் தான் பலுசிஸ்தானில் உள்ளனர். இந்த பலூசிஸ்தான் இருநாடுகளுடன் எல்லையை பகிர்ந்து வருகிறது. ஒருபுறம் ஆப்கானிஸ்தான், இன்னொரு புறம் ஈரான் உள்ளது. மற்றொருபுறம் கடல் இருக்கிறது.
பலூசிஸ்தானை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை வைப்பது பலூசிஸ்தானில் செயல்பட்டு வரும் சில அமைப்புகள் தான். இந்த அமைப்புகளை பலூசிஸ்தான் பிரிவினைவாதிகள் என்று பாகிஸ்தான் முத்திரை குத்தி உள்ளது. இப்படியான சூழலில்தான் பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கை என்பது அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒலிக்க தொடங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் எம்பி மவுலானா ஃபஸ்ல்-உர்-ரஹ்மான். இவர் ஜமீத் உலேமா இ இஸ்லாம் என்ற கட்சியை சேர்ந்தவர். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தானில் செயல்படும் ஜேயூஐ-எப் கட்சியை சேர்ந்தவர்.
மவுலான ஃபலஸ்ல் உர் ரஹ்மான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, ‛1971ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடித்து. பாகிஸ்தான் இரண்டு துண்டாகி வங்கதேசம் என்ற நாடு உருவானது. அதேபோன்ற சூழலை மீண்டும் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் நிலை வந்துள்ளது. பாகிஸ்தான் இரண்டு துண்டாக போகிறது. இந்த முறை பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தான் உடையும். பலூசிஸ்தானில் உள்ள ஐந்தாறு, மாவட்டங்கள் பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெறுவதாக அறிவித்தால் அதை ஐநா சபையே அங்கீகரித்துவிடும். இதற்கு பாகிஸ்தான் அரசு தான் காரணமாக இருக்கும் ' என்றார்.
மவுலான ஃபலஸ்ல் உர் ரஹ்மான் இப்படி பேசியதன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதாவது பலூசிஸ்தானில் வாழும் மக்கள் பலூச் மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த மக்கள் 3 நாடுகளில் அதிகமாக உள்ளனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரானில் அவர்கள் உள்ளனர். ஒரு காலத்தில் பலூச் மக்கள் ஒரே நிலப்பரப்பில் மொத்தமாக வசித்து வந்தனர். அந்த நிலப்பரப்பு என்பது ஆப்கானிஸ்தான் வசம் இருந்தது. அதன்பிறகு நாடுகள் பிரிக்கப்பட்டபோது பலூச் பிராந்தியம் துண்டுதுண்டாக்கப்பட்டது. ஒருபகுதி பாகிஸ்தான், இன்னொரு பகுதி ஈரான் வசம் சென்றது. மற்றொரு பகுதி ஆப்கானிஸ்தானில் உள்ளது.
இதில் பாகிஸ்தானில் வசிக்கும் பலூசிஸ்தானில் வசிக்கும் மக்கள் இன்னும் கூட தனி நாடு கோரி வருகின்றனர். பலூசிஸ்தான் மக்கள் பலரும் தங்களை பாகிஸ்தானியர்கள் என்று அடையாளம் படுத்துவது இல்லை. நாங்கள் தனி இனம் என்று தான் கூறி வருகின்றனர். இது முதல் காரணம். 2வது காரணம் என்னவென்றால் பலூசிஸ்தானை மையப்படுத்தி பல பிரிவினைவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்ந்து மோதி வருகிறது. குறிப்பாக பலூச் விடுதலை ராணுவம் என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் பலர் சண்டையிட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் மற்றும் அந்த ராணுவத்தை குறிவைத்து பலூச் விடுதலை ராணுவம் தற்கொலை படை தாக்குதல் நடத்துவது, முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. இது தான் 2வது காரணமாகும்.
இந்த காரணங்களை முன்வைத்து தான் தற்போது பாகிஸ்தான் எம்பி அப்படி பேசி உள்ளார். மவுலானா சொன்னது போல் ஒரு வேளை பலூசிஸ்தான் உடைந்தால், அது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக விழும். ஏனென்றால் பலூசிஸ்தான் தனி நாடாக அமைந்தால் பாகிஸ்தான் நிலப்பரப்பு என்பது மொத்தமாக சுருங்கி விடும். பாகிஸ்தானின் 43 சதவீத நிலப்பரப்பு பலூசிஸ்தானாக உள்ளது தான் இதற்கு காரணம். பலூசிஸ்தானை நீக்கிவிட்டு பாகிஸ்தானை பார்த்தால் அது மிகவும் சிறிய நாடாக தான் இருக்கும். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் நம் நாட்டில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஒன்றாக இணைத்தால் எவ்வளவு நிலப்பரப்பு வரும். அந்த அளவு மட்டுமே பாகிஸ்தான் இருக்கும்.
பலூசிஸ்தான் தனி நாடாக உருவாகும் பட்சத்தில் பாகிஸ்தான் தனது நிலத்தை மட்டும் இழக்காது. மாறாக இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட பக்கத்து நாடுகளுடன் மோதி வரும் பாகிஸ்தான், கூடுதலாக பலூசிஸ்தானுடனும் சண்டை செய்ய வேண்டிய நிலை வரும். இதனால் பாகிஸ்தானுக்கு தற்போது பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் கூட பலூசிஸ்தான் தனி நாடாக உருவாவதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. பலூசிஸ்தான் தனி நாடாக உருவாக வேண்டும் என்றால் ஐநா அதனை அங்கீகரிக்க வேண்டும். நீண்டகாலமாக பலூசிஸ்தான் கோரிக்கை ஐநா வரை சென்றுள்ளது. இருப்பினும் இன்னும் சக்சஸ் ஆகவில்லை. ஐநாவில் ஒரு நாட்டை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு எம்பிக்களின் ஆதரவு என்பது வேண்டும். அதன்பிறகு பாதுகாப்பு கவுன்சிலின் ஆதரவு என்பது வேண்டும். ஆனால் ஐநாவில் சீனா உள்ளது.
சீனாவுக்கும், பலூசிஸ்தான் மக்களுக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து உள்ளது. பலூசிஸ்தான் கனிமவளங்களை சீனா ஆட்டையை போடுவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. உண்மையில் கனிமவளங்களை பாகிஸ்தான் உதவியுடன் சீனா பயன்படுத்தி வருவதாக கூறப்படும் நிலையில் பலூசிஸ்தான் தனி நாடாக மாறினால் அது சீனாவுக்கு சிக்கலை தரும். இதனால் சீனாவும் சித்து விளையாட்டை அரங்கேற்றி பலூசிஸ்தான் தனிநாடு விவகாரத்தை வெற்றி பெற வைக்காது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். இதனால் பலூசிஸ்தான் தனி நாடாக உருவாகிறதா? இல்லாவிட்டால் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக தொடர்ந்து இருக்கிறதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications