கைல காசு இல்லை.. பணப்பிரச்சனையால் உகாண்டாவில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்
உகாண்டாவிற்கு கிரிக்கெட் விளையாட சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணப்பிரச்சனை காரணமாக அங்கு மாட்டிக் கொண்டு உள்ளனர்.
Recommended Video

கம்பலா: உகாண்டாவிற்கு கிரிக்கெட் விளையாட சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணப்பிரச்சனை காரணமாக அங்கு மாட்டிக் கொண்டு உள்ளனர். மேலும் அங்கு நடக்க இருந்த டி-20 கிரிக்கெட் தொடரும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
உகாண்டாவில் இருந்து திரும்பி வர அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பணம் கொடுக்கவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் புகார் அளித்து இருக்கின்றனர். மேலும் அங்கு தங்களது பணம் தான் அதிகம் செலவு ஆவதாக தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரண்டிற்கும் இடையில் பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. இன்னும் பாகிஸ்தான் வீரர்கள் அங்கு தான் சிக்கி தவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உகாண்டாவில் பாகிஸ்தான் வீரர்கள்
பாஸ்கிதானை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் சிலர் உகாண்டா நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட சென்றுள்ளனர். அங்கு நடக்கும் 'அஃப்ரோ டி-20 லீக்' போட்டியில் கலந்து கொள்வதற்காக இவர்கள் அங்கு சென்றனர். பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய வீரர்களான சயீத் அஜ்மல், யாசிர் ஹமித், இம்ரான் பர்ஹாத் ஆகியோரும் இந்த அணியில் இருந்தார்கள்.

போட்டி ரத்து செய்யப்பட்டது
இவர்கள் சரியாக உகாண்டா செல்லும் சமயத்தில் அங்கு நடக்க இருந்த கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகள் மட்டும் வெவ்வேறு அணிகளுக்கு இடையில் நடந்து இருக்கிறது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்களை மீண்டும் நாட்டுக்கு திரும்பி செல்ல உகாண்டா கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கேட்ட ஒப்பந்த பணத்தை உகாண்டா கொடுக்க மறுத்து இறுகின்றனர்.

டிக்கெட் ரத்து
முதலில் பாகிஸ்தான் வீரர்கள் இது குறித்து விவாதம் செய்து இருக்கிறார்கள். ஆனால் உகாண்டா கிரிக்கெட் வாரியம் அவர்கள் கோரிக்கையை கேட்காததால் அவர்கள் மீண்டும் பாகிஸ்தான் திரும்ப முடிவு செய்து உள்ளனர். ஆனால் போட்டி ரத்தானதால் அவர்களின் விமான டிக்கெட்டும் பிளாக் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் மீண்டும் சொந்த காசில் ஹோட்டல் எடுத்து அங்கு தங்கி இருக்கின்றனர்.

போதிய பணம் இல்லை
எல்லா வீரர்களிடமும் அங்கிருந்து திரும்பி வரும் அளவிற்கு கையில் தற்சமயம் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். ஐசிசி அமைப்பு சொன்ன காரணத்தினாலேயே இப்படி பாகிஸ்தான் வீரர்களை அனுப்பியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. தற்போது இதனால் ஐசிசி அமைப்புக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையில் பிரச்சனை உருவாகி இருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications