Pakistan: மரியாதை கேட்டு வாங்க கூடாது.. இந்தியாவை காட்டி ஷெபாஸ் ஷெரிப் மீது பாயும் பாகிஸ்தான் அரசியல் கட்சிகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பல வழிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு தாஜா செய்து பார்த்தும் அந்த நாட்டை விட இந்தியாவுக்கு குறைந்த வரியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை பார்த்து, ஷெபாஸ் ஷெரிப்பை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ரவுண்டு கட்ட தொடங்கியுள்ளன. சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானியர்கள் ஷெபாஸ் ஷெரீப்பை நையாண்டி செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 50 சதவீதமாக இருந்த வர்த்தக ஒப்பந்தம் 18 ஆக இதன் மூலம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதன் மூலம் இந்திய உற்பத்தி பொருட்களை அமெரிக்காவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியும்.

ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள்
இதனால், இந்தியாவில் பல்வேறு துறைகளுக்கும் இது பெரும் பயனளிப்பதாக இருக்கும் என்று தொழில் துறை நிபுணர்கள் கூறி வருகிறார்கள். அண்டை நாடுகளில் சீனா, பாகிஸ்தானை விட குறைந்த வரியில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் என்னவெல்லாம் தாஜா செய்து பார்த்தும் அந்த நாட்டை விட இந்தியாவுக்கு குறைந்த வரியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் அமெரிக்கா இறக்குமதி வரியை விதித்துள்ளது. இந்தியா அதை விட ஒரு சதவீதம் குறைவான வரி விகிதத்தில் ஒப்பந்தம் கையெழுத்து இட்டு இருப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ரவுண்டு கட்ட தொடங்கியுள்ளன.
அழையா விருந்தாளி போல
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டொனால்டு டிரம்பிற்கு வலிய சென்று ஆதரவு கொடுத்தார். அழையா விருந்தாளி போல ஷெபாஸ் ஷெரீப் பல நேரங்களில் நடந்து கொண்டார். டிரம்பிற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்பதில் தொடங்கி டிரம்ப் அறிவித்த காசா அமைதி வாரியத்தில் இணைந்தது வரை, அமெரிக்காவை எப்பெடியால்லாம் தாஜா செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இறங்கி அந்த நாட்டிற்கு ஆதரவு கொடுத்தது.
ஆனாலும் வரி விவகாரத்திலும் இந்தியாவுடன் தோற்றுப் போயிருப்பது ஷெபாஸ் ஷெரீப் மீதான கடுமயான விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானியர்கள் ஷெபாஸ் ஷெரீப்பை நையாண்டி செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
காட்டமாக விமர்சிப்பு
உமர் அலி என்ற பாகிஸ்தானியர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தனது வேலைகள் அனைத்தையும் வாங்கிவிட்டு, அனைத்து பயன்களையும் அடைந்துவிட்டு, கடைசியில் எனது குடும்பத்திற்கு நான் கட்டுப்பட வேண்டும். எனது உடல் எனது கணவருக்கு மட்டுமே..
என் மனது எப்போதுமே உன்னைத்தான் நினைவில் வைத்து இருக்கும் என்று சொல்லும் வைப்பாட்டி போல ஃபீல்டு மார்ஷல் (பாக்.ராணுவ தளதி)-ஐ டிரம்ப் பயன்படுத்திக் கொண்டார்" என்று பதிவிட்டு காட்டமாக விமர்சித்து இருக்கிறார். அதேபோல பாகிஸ்தானின் இம்ரான் கான் கட்சியும் ஷெபாஸ் அரசை விமர்சித்துள்ளது.
பொருளாதார சிக்கலை மேலும் தீவிரப்படுத்தும்
இந்தியா தனது முக்கியமான பொருளாதாரங்களின் அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்தியதாகவும், பாகிஸ்தான் தலைமையோ தனிப்பட்ட நலனை கருத்தில் கொண்டே பேசியதாகவும் சாடியுள்ளது.
பாகிஸ்தான் பத்திரிகையாளர் அசாத் தூர் கூறுகையில், "இந்த வரி விதிப்பு முடிவுகள் பாகிஸ்தானின் பரந்த பொருளாதார சிக்கல்களை மேலும் தீவிரப்படுத்தும் ஏற்றுமதி குறைந்து வருவது, வெளிநாட்டு முதலீடு சரிவடைந்து வருவது ஆகியவை மேலும் நாட்டின் பேரம் பேசும் திறனை கிட்டத்தட்ட முழுமையாக சிதைந்துவிட்டதை காட்டுவதாகவும்" குறிப்பிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications