ரொட்டிய கூட சுட முடியாது..படுத்தே விட்ட பாக்! கொக்கரித்த ஷெபாஸ் ஷெரிஃப்..இப்போ பம்மி பேசும் அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இந்தியா கோழைத்தனமான தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் என கொக்கரித்து இருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் தரப்பில் பதட்டத்தை குறைக்க தயாராக இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா அசிப் கூறியிருக்கிறார்.

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் தீவிரவாதிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படைகள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.

இந்தியாவின் ராணுவம், விமானப்படை, கப்பல் படை இணைந்து நடத்திய இந்த கூட்டு ஆபரேஷனில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பாபல்பூர், முஷாபர்பாத், கோட்லி, மூர்தி ஆகிய பகுதிகளில் லஸ்கர் இ தொய்ஃபா, ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகளில் தலைமையகங்கள், ஆயுதக் கிடங்குகள் தாக்கி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Khawaja Asif Pakistan india

இந்தியாவின் இந்த திட்டமிட்ட துல்லிய தாக்குதலில் 70 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப் இந்தியாவின் பதிலடி தாக்குதல் போர் நடவடிக்கை தான் எனக் கூறியிருந்தார். இது தொடர்பாக பேசிய அவர்," இந்தியாவின் போருக்கு வலுவான பதிலடி கொடுக்க எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. எதிரியை எப்படி சமாளிப்பது என்பது பாகிஸ்தானுக்கும் அதன் படைகளுக்கும் நன்றாகவே தெரியும். எதிரி தீங்கிழைக்கும் நோக்கங்களில் வெற்றி பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" எனக் கூறியிருந்தார்.

மேலும், இந்தியாவின் பொறுப்பற்ற நடவடிக்கை அணு ஆயுதங்கள் கொண்ட இரண்டு நாடுகளையும் ஒரு பெரிய மோதலுக்கு தள்ளி இருக்கிறது. இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் படுதே விட்டானய்யா பாகிஸ்தான் என்பதை போல பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிப், இந்தியா பதற்றத்தை குறைத்தால், பாகிஸ்தான் தரப்பிலும் பதற்றத்தை குறைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்திய நிலையில், ப்ளூம்பெர்க் டிவியிடம் பேசிய கவாஜா அசிப், "பகைமை நடவடிக்கைகளை தொடங்குவது பாகிஸ்தானின் நோக்கம் அல்ல. ஆனால், எங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் கடந்த இரு வாரங்களாக, இந்தியாவை எங்களால் சுமுகமாக அணுக முடியும் என தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். இந்தியா பின்வாங்கினால், நாங்களும் பதற்றத்தை குறைக்கத் தயார் இரு நாடுகளுக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை திட்டமிடப்படவில்லை" என்றும் கவாஜா அசிப் கூறியுள்ளார்.

காலையில் பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில் சிறிது நேரத்திலேயே பாதுகாப்புத் துறை அமைச்சர் பதற்றத்தை குறைக்க தயார் என கூறியிருப்பது பாகிஸ்தான் பயந்து பின்வாங்கி விட்டதையே குறிப்பதாக சொல்கின்றனர் பாதுகாப்பு நிபுணர்கள். இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தால் இந்திய ராணுவம் பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது. மேலும் ஒரு வேலை பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த துவங்கினால் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் கை கோர்க்கும் என்பதால் ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்ற பயத்தின் காரணமாகவே பாகிஸ்தான் தற்போது பதற்றத்தை குறைக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+