இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் வெற்றி இஸ்லாமின் வெற்றி.. சொல்வது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் வென்றது இஸ்லாத்தின் வெற்றி என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலக கோப்பை முதல் போட்டியில் பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிராக, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உடனேயே ரஷீத் இவ்வாறு கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில், ஷேக் ரஷீத் கூறியிருப்பது பதிவாகியுள்ளது.

கொண்டாட்டங்கள்
இதோ அவரது வார்த்தைகளில் இருந்து.. இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் போட்டியின் போது இருந்துள்ளது. பாகிஸ்தானுக்கு, இன்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஒரு இறுதிப் போட்டி. கிரிக்கெட் போட்டியின் வெற்றியை கொண்டாட, பொதுமக்கள் ஒன்று கூட விதிக்கப்பட்ட தடைகளை அகற்றி, தெருக்களில் அவர்கள் கோலாகலமாக கொண்டாட பாதுகாப்பு வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பாகிஸ்தான் வென்றது இஸ்லாத்தின் வெற்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான ஆட்டம்
பாகிஸ்தான் வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோரின் அற்புதமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்துத. இந்தியா ஒரு 20 ஓவர் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது இது முதல் முறை. பாகிஸ்தான் இப்படியாக ஒரு வெற்றியை பெற்றதும் அந்த அணிக்கு முதல் முறைதான்.

இம்ரான் கான்
டி20 போட்டியின் முடிவு குறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களின் வாயிலாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். "பாகிஸ்தான் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள் & முன்னணியில் இருந்து வழிநடத்திய பாபர் ஆசாம் மற்றும் ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அப்ரிடியின் அற்புதமான செயல்பாடுகளுக்கு வாழ்த்துக்கள். உங்கள் அனைவரையும் நினைத்து தேசம் பெருமை கொள்கிறது" என்று அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

முகமது ஷமி
இப்படியாக அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தால், நம்ம ஊரில் சில ரசிகர்கள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை மதரீதியாக விமர்சனம் செய்து சர்வதேச அளவில் இந்திய ரசிகர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் முகமது ஷமிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications