ஐநாவிடம் செல்கிறோம்.. பாதுகாப்பு கவுன்சிலிலும் முறையிட முடிவு.. பாகிஸ்தான் அதிரடி திட்டம்!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் குறித்து ஐநாவில் முறையிட உள்ளதாக பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்தியாவுக்கு எதிராக 5 முக்கிய முடிவை எடுத்த பாகிஸ்தான்- வீடியோ

    இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் குறித்து ஐநாவில் முறையிட உள்ளதாக பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளது.

    இரண்டு நாட்களுக்கு முன்பாக யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுபற்றி எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.

    Pakistan says, The Kashmir issue to be taken to UN, including the Security Council

    அதே சமயம் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநாவின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டேர்ஸ், விளக்கம் அளித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் நடக்கும் மாற்றங்களை கவனித்து வருகிறோம்.

    அங்கு எதும் பிரச்சனை ஏற்படாது என்று நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தியா பாகிஸ்தான் இரண்டு தரப்பும் அங்கு அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றுள்ளார்.

    இதையடுத்து தற்போது புதிய திருப்பமாக இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்த போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் வாகாவில் இருக்கும் எல்லையை மொத்தமாக மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    அதேபோல் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் குறித்து ஐநாவில் முறையிட உள்ளதாக பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளது. ஐநாவில் மட்டுமில்லாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் முறையிட போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது. இவர்களிடம் பாகிஸ்தான் தரப்பில் புகார் அளிக்கப்பட உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+