தீவிரவாதத்தில் டெக்னாலஜியை புகுத்தி அடுத்த லெவலுக்கு சென்ற பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள சர்வர் ஒன்றை 10 பேர் மட்டுமே பயன்படுத்தியதை தேசிய புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உத்தம்பூரில் தாக்குதல் நடத்தியது பற்றி தேசிய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் பாகிஸ்தானில் உள்ள கம்ப்யூட்டர் சர்வர் ஒன்றை உத்தம்பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உள்பட 10 பேர் மட்டும் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

தீவிரவாதிகள் இது போன்ற புதிய முறையை பயன்படுத்துவதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்பினர் ஏதாவது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு சர்வரை அமைத்து காரியம் முடிந்ததும் அதை பயன்படுத்துவதை நிறுத்திவிடுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளை கண்டுபிடிப்பது போலீசாருக்கு கடினமாகிவிடுகிறது.
உத்தம்பூர் தாக்குதலை 10 பேர் நடத்தியுள்ளனர். அதனால் அவர்கள் தான் அந்த சர்வரை பயன்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இது போன்ற சர்வர்களை லஷ்கர் இ தொய்பா பயன்படுத்துவது முகமது நவீத் என்ற தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இது போன்ற சர்வர்கள் அமைக்கப்படுவதும், பயன்படுத்தாமல் விடுவதும் சகஜம். உத்தம்பூர் மற்றும் குர்தாஸ்பூர் தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் ஊடுருவியது தெரியாமல் போனதற்கு இந்த சர்வர் பயன்பாடும் காரணம்.
இந்த சர்வர்கள் பாகிஸ்தானில் இருப்பதால் விசாரணையில் ஒரு பயனும் இல்லை என்று புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications