Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: வளைகுடா மோதலால் கச்சா எண்ணெய் விலை உச்சத்திற்குப் போய் இருக்கும் சூழலில், இது சர்வதேச அளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தடுமாறிக் கொண்டு இருக்கும் பாகிஸ்தானுக்கு மற்றொரு அடியாக தாங்கள் கொடுத்த கடனை உடனடியாக திரும்பத் தர வேண்டும் என ஐக்கிய அமீரகம் சொல்லியுள்ளது. இது பாகிஸ்தானை மிக மோசமான ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தான் பொருளாதார ரீதியாகத் தடுமாறிக் கொண்டு இருந்தது. வளர்ச்சியைக் கவனிக்காமல் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது, ஊழல் உள்ளிட்ட காரணங்களால் மிக மோசமான நிலைக்குப் பாகிஸ்தான் தள்ளப்பட்டது. இதைச் சமாளித்துத் திரும்ப வருவதே பாகிஸ்தானுக்கு பெரும் போராட்டமாக இருக்கிறது. இந்தச் சூழலில் வெடித்த வளைகுடா மோதல் பாகிஸ்தானைப் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதித்தது.

Pakistan UAE debt UAE Pakistan China

பாகிஸ்தான்

அதாவது வளைகுடா மோதலால் கச்சா எண்ணெய் விலை எக்குத்தப்பாக உயர்ந்துள்ள சூழலில், கச்சா எண்ணெய்க்குக் கிட்டத்தட்ட இறக்குமதியையே முழுமையாகச் சார்ந்து இருக்கும் பாகிஸ்தான் இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் ஐக்கிய அமீரகமும் பாகிஸ்தான் கழுத்தை இறுக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 7 வருஷமா வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்காமல் 'ரோல் ஓவர்' செய்து வந்த ஐக்கிய அரபு அமீரகம், இப்போது "அந்த 3 பில்லியன் டாலரை (சுமார் ₹25,000 கோடி) உடனே திருப்பித் தாங்க" எனக் கறாராகச் சொல்லிவிட்டது.

ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு, இது இடியாப்பச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகப் பாகிஸ்தான் கஷ்டப்படும்போதெல்லாம் வளைகுடா நாடுகள் தான் கைகொடுக்கும். ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக உள்ளது. வளைகுடா நாடுகளே சிக்கலில் உள்ள நிலையில், பாகிஸ்தானுக்குக் குடைச்சல் தான்.. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளவில் எகிறும் கச்சா எண்ணெய் விலை, அந்த நாடுகளையும் யோசிக்க வைத்துள்ளது. இதனால் கடந்த 7 ஆண்டுகளில் முதல்முறையாக, வாங்கிய கடனை நீட்டிக்க அமீரகம் மறுத்துவிட்டது.

அந்நிய செலாவணி

பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது 16.4 பில்லியன் டாலராக உள்ளது. இது வெறும் 3 மாத இறக்குமதிக்கு மட்டுமே போதுமானது. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவிடம் $697.12 பில்லியன் டாலர் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு மோசமான அளவிலேயே டாலர் இருப்பு உள்ள நிலையில், இந்தச் சூழலில் தான் அமீரகத்திற்கு பிரஷர் அதிகரித்துள்ளது. அதாவது தனக்கு வர வேண்டிய 3 பில்லியன் டாலர் வர வேண்டும் என்கிறது அமீரகம். ஆனால், இப்போது இருக்கும் சூழலில் 3 பில்லியன் டாலரை அமீரகத்திற்குக் கொடுத்தால், அது பாகிஸ்தான் கஜானாவையே காலி செய்துவிடும்.

தடுமாறும் பாகிஸ்தான்

அமெரிக்காவில் நடக்கும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டத்தில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப், பணத்தைத் திரட்ட பல வழிகளைத் தேடி வருகிறார்.. அதில் முதல் ஆப்ஷன் பண்டா பாண்டுகள் (Panda Bonds).. சீனாவிடம் இருந்து யுவான் கரன்சியில் கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக 250 மில்லியன் டாலர் வாங்குவதே இதன் இலக்கு! அடுத்து யூரோ பாண்டுகள்.. 4 வருஷ கேப்புக்கு பிறகு உலகச் சந்தையிலும் பாண்டுகளை வெளியிட்டு டாலர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளனர்.

இது தவிர ஐஎம்எஃப் (IMF) உதவியையும் கூட தனியாக வாங்கத் திட்டமிட்டுள்ளனர். அதாவது ஏற்கனவே பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் டாலர் வழங்குவதாக ஐஎம்எஃப் உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், அடுத்த தவணையாக 1.3 பில்லியன் டாலர் விரைவில் வரும் என மலைபோல நம்பியுள்ளனர். இந்த எல்லாவற்றையும் வைத்தே அமீரகத்திற்குத் தர வேண்டிய கடனை திரும்பத் தரப் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

திவால்?

சீனா மற்றும் சவுதி அரேபியா நாடுகளுடன் இது தொடர்பாகப் பாகிஸ்தான் ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல்கள் கசிந்தாலும், அவுரங்கசீப் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. "எல்லா வழிகளையும் யோசிச்சுட்டு இருக்கோம்" என்பது மட்டுமே அவரது இப்போதைய பதிலாக உள்ளது.. வாங்கிய கடனை அடைக்க வட்டிக்கு மேல வட்டி வாங்குறது... அதுக்கும் வழியில்லன்னா புதுசு புதுசா பாண்டு வெளியிடுறதுன்னு பாகிஸ்தான் போடுற கணக்கு, அந்த நாட்டை திவால் நிலைக்குத் தள்ளிவிடுமோ என்ற கவலையும் எழவே செய்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+