போர் நிறுத்தத்தை மீறி மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல்.. திருந்தாத ஜென்மம்.. காஷ்மீர் எல்லையில் பதற்றம்
காஷ்மீர்: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் செய்ய முடிவு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து இரு நாட்டுக்கும் இடையிலான உறவு மேலும் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தானில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் பல தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இந்த தருணத்தில் பாகிஸ்தானும் காஷ்மீர் எல்லையோர பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியாவும் பதிலடி தாக்குதல் கொடுத்து பாகிஸ்தானில் உள்ள முக்கிய விமான தளங்களை அழித்தது.
இதனால் பதற்றம் அதிகரிக்க தொடங்கியதை அடித்து அமெரிக்கா தலையிட்டு போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தியது. இந்த சூழ்நிலையில் மாலை 5 மணி அளவில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டிரம்ப், இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறி இரு நாடுகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்து மூன்று மணி நேரம் கூட ஆகாத நிலையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் எல்லையோர பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தி இருப்பதாக பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் சஉறுதிப்படுத்தி இருக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், பாகிஸ்தானில் யாருடைய ஆட்சி நடக்கிறது.
பாகிஸ்தான் அரசின் தலைமை இஸ்லாமாபாத்தில் இருக்கிறதா இல்லை ராவல்பிண்டியில் இருக்கிறதா? என்று தெரியவில்லை. போர் நிறுத்தம் செய்கின்றோம் என்று அறிவித்த பாகிஸ்தான் ராணுவத்தினரை நம்ப முடியுமா என்றும் இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications