உயிரை காக்க பாகிஸ்தானிலிருந்து ஓடியவர்! இம்ரானை ஆட்டிப்படைக்கும் ஷேபாஸ்! எதிர்கால பிரதமரா? யார் இவர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்னும் 90 நாட்களில் பிரதமர் பதவிக்கு தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷேபாஸ் ஷெரிப் பிரதமர் பதவிக்கான ரேஸில் முன்னிலையில் இருக்கிறார்.. யார் இவர்? ஏன் இவர் முக்கியத்துவம் பெறுகிறார்? என்று பார்க்கலாம்.
பாகிஸ்தானில் நேற்று நடக்க இருந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இம்ரான் கானின் ஆட்சி கவிழும் என்று எதிர்பார்த்த எதிர்க்கட்சிகளுக்கு இது பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இது போக இன்னொரு திருப்பமாக.. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என்றும் அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் கான் பிரதமராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பக்கம் வழக்கு நடந்து வருகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
நேற்று நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி நிராகரித்தார். இதனால் இம்ரான் கான் ஆட்சி கவிழவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளான முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து உள்ளன. அதோடு எதிர்க்கட்சி கூட்டணி ஆதரவுடன்.. ஷேபாஸ் ஷெரிப்தான் பாகிஸ்தானின் புதிய பிரதமர் என்றும் அறிவித்து உள்ளன.

ஷேபாஸ் ஷெரிப்
ஆனால் பாகிஸ்தான் ஜனாதிபதி இன்னும் ஷேபாஸ் ஷெரிப்பை பிரதமராக எல்லாம் அறிவிக்கவில்லை. அங்கு விரைவில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாகிஸ்தானின் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷேபாஸ் ஷெரிப் பிரதமருக்கான ரேஸில் இருக்கிறார். 69 வயதாகும் இவர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியாவார். நவாஸ் ஷெரிப் ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமராக மூன்று முறை இருந்தவர். 2018ல் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனில் வசித்து வருகிறார்.

நவாஸ் தம்பி
இவரின் ஜாமீன் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. இவரின் முஸ்லீம் லீக் கட்சியை தற்போது அவரின் தம்பி ஷேபாஸ் ஷெரிப்தான் நடத்தி வருகிறார். பாகிஸ்தான் பஞ்சாப்பின் முதல்வராக 1997, 2008 மற்றும் 2013 ஆகிய மூன்று முறை ஷேபாஸ் ஷெரிப் பதவி வகித்து இருக்கிறார். 1999ல் அங்கு நவாஸ் ஷெரிப் ஆட்சியை முஷரப் தலைமையிலான ராணுவம் கவிழ்த்தது. அப்போது ஷேபாஸ் ஷெரிப் ஆட்சியையும் பாகிஸ்தான் பஞ்சாப்பில் கவிழ்ந்தது.

முஷரப்
பின்னர் 1 வருடம் வீட்டு சிறையில் இருந்த ஷேபாஸ் ஷெரிப், பின்னர் முஷரப் கொடுத்த மன்னிப்பால் சவுதி அரேபியாவிற்கு தப்பி ஓடினார். அங்கு நவாஸ் மற்றும் ஷேபாஸ் ஷெரிப் இருவரும் 10 வருடங்கள் இருக்க வேண்டும் என்று கையெழுத்து வாங்கி முஷரப் அனுப்பி இருந்தார். ஆனால் அதன்பின் பாகிஸ்தான் அரசியல் சூழல் மாறவே ஷேபாஸ் ஷெரிப் 2007ல் மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார்.

ராணுவ மோதல்
அன்று ராணுவத்தால் சவுதிக்கு ஓடியே அதே ஷேபாஸ் ஷெரிப்பிற்குதான் இன்று பாகிஸ்தான் ராணுவம் மறைமுக ஆதரவை அளித்துள்ளது. ராணுவம் இதை மறுத்தாலும், ராணுவத்தின் ஆதரவு ஷேபாஸ் ஷெரிப்பிற்கே உள்ளது. ராணுவம் இம்ரானை விரும்பவில்லை. அதன்பின் நவாஸ் ஷெரிப்பின் முஸ்லீம் க்ளீன் நவாஸ் கட்சிக்கு கடந்த 2018 மார்ச் மாதம் இவர் தலைவராக அறிவிக்கப்பட்டார். அப்போதுதான் நவாஸ் ஷெரிப் பனாமா வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

எதிர்கட்சித் தலைவர்
இதையடுத்து 2018ல் எதிர்கட்சித் தலைவராக இதையடுத்து ஷேபாஸ் ஷெரிப் அறிவிக்கப்பட்டார். ஆனால் இவர் மீதும் நிறைய பணமோசடி குற்றச்சாட்டுகள் உள்ளன. கருப்பு பண புகார் காரணமாக 2019ல் பாகிஸ்தானில் தேசிய கணக்காயம் இவரின் 23 சொத்துக்களை மொத்தமாக முடக்கியது. அதன்பின் 2020ல் இவரை கைதும் செய்தது. இந்த வழக்கில் அவர் சிறைக்கும் சென்றார். கடந்த 2021 ஏப்ரல் மாதம்தான் கருப்பு பண வழக்கில் இவருக்கு பெயில் வழங்கப்பட்டது.

ராணுவ உதவி
இம்ரான் கான் தற்போது ஷேபாஸ் ஷெரிப் மீது உள்ள இந்த வழக்கை வைத்து இவரை முடக்க முயன்று கொண்டு இருக்கிறார். காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் இருந்து பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிக்கு குடியேறிய குடும்பம்தான் ஷேபாஸ் ஷெரிப் குடும்பம். இவருக்கு சொந்தமாக பல கோடி மதிப்பு கொண்ட ஸ்டீல் கம்பெனி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரைத்தான் தற்போது எதிர்க்கட்சிகள் அங்கு பிரதமராக முன்னிறுத்தி உள்ளன. தேர்தல் நடக்கும் பட்சத்தில் இம்ரானுக்கு ஷேபாஸ் ஷெரிப் (ராணுவத்தின் உதவியுடன்) டப் பைட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications