ரொம்ப மோசமான பாஸ்போர்ட் பாக். பாஸ்போர்ட்தானாம்.. நாம பரவாயில்லை!
இஸ்லாமாபாத்: இருப்பதிலேயே மோசமான பாஸ்போர்ட்கள் என்ற பெயரை பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட்கள் பெற்றுள்ளன.
சோமாலியாவை விட பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் மோசமாம்.
ஹென்லி அண்ட் பார்ட்ர்னர்ஸ் என்ற நிறுவனம் இதுதொடர்பாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

32 நாடுகளுக்குத்தான் விசா இல்லாமல்
பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்துள்ள ஒருவர், உலக நாடுகளில் 32 நாடுகளுக்கு மட்டும்தான் விசா இல்லாமல் போக முடியும்.

இந்தியா பரவாயில்லை
அதேசமயம், இந்திய பாஸ்போர்ட்கள் கெளரவமான நிலையிலேயே உள்ளன. அதாவது விசா இல்லாமல் 52 நாடுகளுக்கு ஒரு இந்தியர் செல்ல முடியும்.

ஆப்கானிஸ்தான் நிலைமை இன்னும் மோசம்
ஆப்கானிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தால் 28 நாடுகளுக்கு மட்டும்தான் விசா இல்லாமல் போக முடியும்.

கடை நிலையில் பாக்., சோமாலியா, ஈராக்
பாகிஸ்தான், சோமாலியா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மோசமான பாஸ்போர்ட்கள் கொண்ட நாடுகள் வரிசையில் கடைசி நிலையில் உள்ளன.

பின்லாந்து, ஸ்வீடன், இங்கிலாந்துதான் பெஸ்ட்
இந்த வரிசையி்ல பின்லாந்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அதே போல ஸ்வீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்திருந்தால் உலக அளவில் 173 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்.

அமெரிக்கர்கள் 2வது இடம்
அமெரிக்க பாஸ்போர்ட்கள் இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளன. அவர்கள் 172 நாடுகள் வரை விசா இல்லாமல் போக முடியுமாம்.












Click it and Unblock the Notifications