Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுகூட தெரியலையேப்பா இவருக்கு.. பாகிஸ்தான் அரசியல்வாதியை நக்கல் செய்யும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அரசியல்வாதி! விமான விபத்து வீடியாவோல் நேர்ந்த கதி

    இஸ்லாமாபாத்: எரிபொருள் நிரப்பிய லாரியுடன் விமானம் மோதுவது போன்ற வீடியோ கேம் வீடியோவை உண்மை என தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் அரசியல்வாதி வெளியிட்டு, வாங்கி கட்டிக்கொண்டுள்ளார்.

    இணையதளங்களில் மிகவும் பிரபலம். வீடியோ கேம் விளையாட்டு 'கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 5' . இந்த வீடியோ கேம் விளையாட்டு பார்ப்பதற்கு தத்ரூபமான காட்சிகள் போல் இருக்கும். அதில் ஒரு காட்சியில் விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பும் போது எரிபொருள் நிரப்பிய லாரி மீது மோதுவது போல சித்தரிக்கப்பட்டு இருக்கும். இந்த விளம்பரம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    Pakistani politician mistakes GTA5 video game for real-life footage, he tell, Miraculous save by pilot’s presence of mind

    இந்நிலையில் விமானம், லாரியுடன் மோதுவது போன்ற வீடியோவை உண்மை என நம்பி பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியின் பொதுச் செயலாளர் குர்ரம் நவாஸ் அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த அவர், அதற்கு மேல் விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பி விட்டது என்றும், இதற்கு விமானியின் சாமர்த்தியமே காரணம் என்றும் பதிவிட்டு இருந்தார்.

    இதனை பார்த்த பலர் அது வீடியோ கேம் என்றும், விளையாட்டு என்றும் பலரும் அவரது பதிவுக்கு கீழ் விமர்சனம் செய்தனர். இதன்பின்னர் அந்த டுவிட்டை அவர் நீக்கினார். வீடியோ கேம்மை உண்மை என நம்பிய பாகிஸ்தான் அரசியல்வாதி குர்ரம் நவாஸை பலரும் கிண்டலடித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+