அணு ஆயுத தாக்குதலா? "அதெல்லாம் இல்லைங்க.." இந்தியாவை பற்றி வாய் திறக்கவே பயக்கும் பாகிஸ்தான்!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த ஜூன் மாதம் மோதல் ஏற்பட்ட போது பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவை மிரட்ட முயன்றனர். பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்களைச் சொல்லி மிரட்ட முயன்றனர். இருப்பினும், அது வேலைக்கு ஆகவில்லை. இதற்கிடையே அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த விஷயத்திலும் இப்போது பேக் அடித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தூதர் ஒருவர் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இந்தியாவுடன் பதற்றம் அதிகரித்தால், பாகிஸ்தான் தனது முழு பலத்தையும் பயன்படுத்தும் என்றும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்பது போலவும் கூறியிருந்தார்.

Pakistan s Shehbaz Sharif Backtracks on Threats against India After Operation Sindoor

பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்

அவரது கருத்துக்கு இந்தியா உட்படப் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தது. பொறுப்பில் இருக்கும் ஒருவர் அணு ஆயுதங்கள் குறித்து இதுபோல அலட்சியமாகப் பேசக்கூடாது எனப் பலரும் கண்டித்தனர். இந்தச் சூழலில் தான் அதற்கு நேர் மாறான கருத்தை ஷெரீப் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி என்பவரே இந்தக் கருத்துகளைக் கூறியிருந்தார். ரஷ்ய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் இருந்து ராணுவ தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், அப்படி நடந்தால் பாகிஸ்தான் தனது முழு பலத்தையும் கொண்டு பதிலடி கொடுக்கும் என்றும் கூறியிருந்தார். மேலும், பாகிஸ்தானில் சில பகுதிகளைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.

தேவையில்லாத பேச்சு

மேலும், பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை நிறுத்தினால் அது போராகக் கருதப்படும் என்றும் நீரை நிறுத்தினால் அது போர்க்குற்றமாகக் கருதப்படும் என்றும் கூறியிருந்தார். அப்போது தான் அணு ஆயுதங்கள் குறித்த எச்சரிக்கையையும் அவர் விடுத்தார். ஆனால், அவரது மிரட்டல்கள் எல்லாம் வேலைக்கு ஆகவில்லை.

உளவுத் துறை தகவல் இருப்பதாகச் சொன்னாலும் கூட பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை முழுமையாக அழித்தது. அதை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. அதன் பிறகும் கூட தேவையில்லாமல் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றது. ஆனால், அதையும் இந்தியா சமாளித்தது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளைத் தாக்கவே முடியாமல் பாகிஸ்தான் சிரமப்பட்டது. ஆனால், பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் இருக்கும் ராவல்பிண்டி மீதே இந்தியா தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுத மிரட்டல்?

மேலும், பயங்கரவாத செயல்களுக்கு எதிராக இந்தியா செயல்படும்போது எந்த அணு ஆயுத மிரட்டலையும் ஏற்றுக்கொள்ளாது என்றும் எங்களது பதில் துல்லியமானது மற்றும் உறுதியானது என்று பிரதமர் நரேந்திர மோடி மே 13ம் தேதி கூறியிருந்தார். அதேபோல பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து விட்டு அணு ஆயுதங்கள் பற்றிப் பேசுவதை ஏற்க முடியாது என்று பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் அனில் சவுகானும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாய் திறக்கவே அச்சம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. மேலும், சிந்து நதி நீரை உள்நாட்டிலேயே பயன்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் பாகிஸ்தானின் பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களில் மிகப் பெரிய வறட்சி ஏற்படலாம். இதன் காரணமாகவே தொடர்ச்சியாக பாகிஸ்தான் மோதலைத் தவிர்த்து பல்டி அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவைப் பற்றி வாய் திறக்கவே பயப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+