பாலஸ்தீன அமைச்சரை அடித்தே கொன்ற இஸ்ரேல் ராணுவம்! வீடியோ இணைப்பு
ஜெருசலம்: பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் அந்த நாட்டு அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் நாட்டு ராணுவத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட மேற்குக்கரை பகுதியில் உள்ள துர்முசியா என்ற கிராமத்தில் நடைபெற்றுவரும் இரு நாட்டவர்களுக்கும் இடையேயான போராட்டத்தை பார்வையிட பாலஸ்தீன அமைச்சர் (துறை ஒதுக்கப்படவில்லை)ஜையாத் அபு இன் இன்று அங்கு சென்றிருந்தார். அப்போது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் அவரை வரவிடாமல் தடுத்தனர்.
இதையும் மீறி அப்பகுதிக்கு செல்ல முயன்ற அமைச்சரை இஸ்ரேல் ராணுவத்தினர் பிடித்து தள்ளி அடித்து உதைத்தனர். துப்பாக்கி மறு முனையால் அமைச்சரின் நெஞ்சில் குத்தினர். இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அமைச்சர் ஜையாத் அபு இன், ஆம்புலன்ஸ் மூலம் ரமலா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே அமைச்சர் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு நடுவேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த கொலையை பாலஸ்தீன அதிபர் மெகமூத் அப்பாஸ் கடுமையாக கண்டித்துள்ளார். அதே நேரம், சம்பவம் குறித்து விசாரிப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனிடையே, ரஷ்ய நாட்டு தொலைக்காட்சி சேனல், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications