கட்டக் கடைசி "நி்ர்வாண" பிளேபாய் இதழின் அட்டைப் படத்தில் பமீலா

Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா: நிர்வாண படங்களை நிறுத்த முடிவெடுத்துள்ள பிளேபாய் நிர்வாகம், தனது கடைசி இதழின் அட்டைப் படத்தில் பமீலா ஆண்டர்சனின் படத்தை போடவுள்ளது.

பல காலமாக பிளேபாய் இதழை அலங்கரித்து வந்த நிர்வாண படங்களை நிறுத்த முடிவெடுத்துள்ளது பிளேபாய் நிர்வாகம். இது பிளேபாயின் நீண்ட கால ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Pamela Anderson will be the covergirl of last 'nude' Playboy

தற்போது நி்ர்வாணப் படத்துடன் கூடிய கடைசி இதழ் டிசம்பர் 11ம் தேதி வரவுள்ளது. அதன் அட்டைப் படத்தில் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சனின் படம் இடம் பெறவுள்ளது.

இதுவரை 14 முறை பிளேபாய் அட்டைப் படத்தில் இடம் பெற்றுள்ளார் பமீலா. தற்போது 15வது முறையாக அவர் இடம் பெறப் போகிறார். அதை விட முக்கியமாக நிர்வாணப் படத்துடன் கூடிய கடைசி இதழின் அட்டைப் படத்தையும் அலங்கரிக்கப் போகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இன்டர்நெட்டுடன் போட்டி போடுவது கஷ்டமானது. எனவே நிர்வாணப் படங்களை நிறுத்தும் பிளேபாயின் முடிவு சரியானதே.

பெண்களும் முன்பு போல இல்லை. ரொம்ப மாறிப் போய் விட்டார்கள். செல்பி எடுக்கும் காலம் இது. அதுவும் கவர்ச்சிகரமாக செல்பி எடுக்கும் காலம் இது. எனவே இனியும் பிளேபாய் இதழில் நிர்வாணப் படம் இடம் பெறுவது பழைய பேஷனாகவே இருக்கும் என்றார் அவர்.

1953ம் ஆண்டு முதல் பிளேபாய் இதழ் வெளியானது. அதன் அட்டைப் படத்தில் மர்லின் மன்றோ இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+