2018ஆம் வருடத்தின் அதிகாரப்பூர்வ நிறம் இதுதான்.. அதுசரி 2017ன் நிறம் என்ன தெரியுமா?
2018ஆம் வருடத்திற்கான அதிகாரப்பூர்வமான நிறம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

நியூ ஜெர்சி: 2018ஆம் வருடத்திற்கான அதிகாரப்பூர்வமான நிறம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் வழக்கமாக இப்படி நிறம் அறிவிக்கப்படும். அதேபோல் இந்த முறையும் டிசம்பரில் அடுத்த வருடத்திற்கான நிறம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவில் இருக்கும் 'பேண்டோன்' என்ற நிறுவனம் இப்படி நிறம் அறிவிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறது. 2010ல் இருந்து இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது.
2018ம் வருடத்தின் அதிகாரப்பூர்வ் நிறம் என்ன என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்த போது அதற்கான அறிவிப்பை வெளியிட்டு, வித்தியாசமான விளக்கத்தை அந்த நிறுவனம் கொடுத்து இருக்கிறது.

பேண்டோன் நிறுவனம்
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 'பேண்டோன்' என்ற நிறுவனம் ஒன்று இயங்கிக் கொண்டு இருக்கிறது. வண்ணங்கள் சம்பந்தமான நிறைய ஆராய்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் இந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மேலும் பெயிண்டில் தொடங்கி எழுதும் கலர் பென்சில்கள் வரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்திற்கான அதிகாரப்பூர்வ நிறத்தை இந்த அமைப்பு வெளியிடும். கடந்த 2010ல் இருந்து வழக்கத்தை கொண்டு இருக்கிறது.

எப்படி நடக்கும்
இதற்காக உலகில் இருக்கும் முக்கியமான நாடுகள் அனைத்தில் இருந்தும் சில நபர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களின் சந்திப்பு யாருக்கும் தெரியாத இடத்தில் ரகசியமாக நடக்கும். மேலும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதும் ரகசியமாக வைக்கப்படும். பின் டிசம்பர் மாதத்தில் சரியாக நிறத்தை தேர்வு செய்துவிட்டு அறிவிப்பை வெளியிடுவார்கள்.

என்ன நிறம்
இந்த நிலையில் 2018ம் வருடத்திற்கான அதிகாரப்பூர்வ நிறத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அந்த நிறுவனம் 'கத்தரிப்பூ (பர்பிள்)' நிறத்தை தேர்வு செய்து இருக்கிறது. இந்த நிறம் செல்வ வளத்தை குறிக்கும் என்பதாலும், 2018ம் வருடம் அதிக செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நிறம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

2017ன் நிறம்
பலருக்கும் 2017ல் என்ன நிறம் கடைபிடிக்கப்படுகிறது என்று தெரியாது. 2016 டிசம்பரில் இந்த நிறுவனம் அந்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 2017ம் ஆண்டின் நிறம் பச்சை ஆகும். இது உலகில் மாசுபாட்டின் அளவை குறைக்கும் நோக்கில் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது புதிய தொடக்கத்தை குறிக்கும் என்பதாலும் இந்த நிறம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications