தலைகீழாகத்தான் குதிப்பேன்.. பிரதமர் மோடிக்காக 13,000 அடி உயரத்திலிருந்து குதித்த பெண்! -வீடியோ
பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொல்வதற்காக பெண் ஒருவர் விமானத்தில் சென்று 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார்.
சிகாகோ: பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்காக பெண் ஒருவர் விமானத்தில் சென்று 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காக அவர் வாரணாசி சென்று இருந்தார்.
அவரது பிறந்த நாளுக்கு பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. உலகம் முழுக்கவிருந்து இவருக்கு வாழ்த்துகள் குவிந்தது.
|
எப்படி வாழ்த்தினார்
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொல்வதற்காக பெண் ஒருவர் விமானத்தில் சென்று 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார். இவர் பெயர் ஷீதல் மஹாஜன். இவர் இந்தியாவின் மிகவும் திறமையான ஸ்கை டைவர்களில் ஒருவர்.

வாழ்த்து தெரிவித்துள்ளார்
இவர் 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்தார். இந்திய கொடி நிறத்தில் உடை அணிந்து கொண்டு குதித்தார். அமெரிக்காவின் சிகாகோவில் அவர் இந்த சாதனையை செய்தார். பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்படி கையில் ஒரு பேப்பர் வைத்து இருந்தார்.
பெரிய வைரல்
இந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இதை பிரதமர் மோடி பார்த்தாரா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. பலர் இவரின் திறமையை பாராட்டி வருகிறார்கள். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.
|
யார் இவர்
மும்பையை சேர்ந்த இவர் ஏற்கனவே இது போல் சாதனை செய்துள்ளார். ஏற்கனவே இவர் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார். இவர் பத்ம ஸ்ரீ விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications