For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினமும் பள்ளிக்கு 12 பஸ்களில் சவாரி – 5 வயது மாணவனின் கஷ்ட பயணம்.. லண்டனில்!

Google Oneindia Tamil News

லண்டன்: பள்ளிக்கு போகவே நம்முடைய குழந்தைகள் அடம் பிடிக்கும் நிலையில் இங்கிலாந்தில் ஒரு சிறுவன் 12 பஸ்கள் மாறி பள்ளிக்குச் சென்று வருகின்றான்..

இங்கிலாந்தில் உள்ள மேற்கு யாக்சயர் என்ற இடத்தை சேர்ந்தவர்கள் கெல்லி மற்றும் டேவிட் டெய்லர் தம்பதி. இவர்களுக்கு 5 வயது மகன் இருக்கிறான்.

இவனை பள்ளியில் சேர்ப்பதற்காக வீட்டு பக்கத்தில் உள்ள பள்ளிகளுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் இடம் கிடைக்க வில்லை. வெகு தூரத்தில் உள்ள பள்ளியில் தான் இடம் கிடைத்தது. எனவே அந்த பள்ளியில் சேர்த்தனர்.

Parents of boy, five, face taking 12 bus journeys a day

அங்கு செல்வதற்கு போதிய வாகன வசதிகள் இல்லை. இதனால் அந்த சிறுவன் தினமும் 12 பஸ் ஏறி அந்த பள்ளிக்கு சென்று வருகிறான். இதனால் அவன் மிகவும் சிரமப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். எனவே தங்கள் வீட்டருகே உள்ள பள்ளியில் அவனுக்கு இடம் தர வேண்டும் என்று மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.

பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்குப் போகவே கடுப்படிக்கும் நம்ம ஊர் வாண்டுகளுக்கு மத்தியில் இந்தப் பையன் 12 பஸ் ஏறி போய் வருவதை பாராட்டாமல் இருக்க முடியாது!

English summary
A family who moved home so they could send their son to a primary school found they were still outside the catchment area - and now face 12 bus journeys a day to take him elsewhere.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X