நிர்வாண விரும்பிகளை வரவேற்கும் பாரிஸில் நிர்வாணப் பூங்கா
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் பொது பூங்காவின் ஒரு பகுதியில் நிர்வாணமாக வருபவர்களுக்கென ஒரு தனி நிர்வாணப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரின் கிழக்கு பகுதியில் இருக்கும் போயிஸ் டி வின்சென்ஸ் என்ற இடத்தில், கால்பந்து மைதான அளவிற்கு இந்த நிர்வாணப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக சோதனை முயற்சியாக அக்டோபர் 15-ம் தேதி வரை இந்தப் பூங்கா திறக்கப்பட்டிருக்கும்.
இந்த பூங்காவில் வேண்டுமென்றே பாலுறுப்புகளை வெளிப்படுத்துவது, மற்றவர்களின் நிர்வாணத்தைப் பார்த்து களிப்படைவது போன்றவற்றைச் சகித்துக்கொள்ள முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் பொது இடங்களைப் பயன்படுத்துவதில், எங்கள் திறந்த மனதுடைய பார்வையின் ஒரு பகுதியே இது என பூங்காக்களை நிர்வகிக்கும் துணை மேயர் பெனிலோப் கோமிட்ஸ் கூறியுள்ளார்.
- பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம்
- 'ஆட்டம், பாட்டம் சரி; ஆனால், நிர்வாண நடனம் கூடாது'
- கின்னஸ் சாதனையை முறியடிக்க நீச்சல் வீரர்கள் நிர்வாண ஓட்டம்
நிர்வாணமாகப் பூங்காவுக்கான இடம் என்பது அறிவிப்பு பலகை மூலம் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்படும். 8:00 முதல் 19:30 மணி வரை இந்த நிர்வாணப் பூங்கா திறந்திருக்கும்.
பிரான்ஸ் பல நிர்வாண கடற்கரை, நிர்வாண விடுமுறை விடுதிகளைக் கொண்டிருக்கும் நாடு என்பதால், நிர்வாண விரும்பிகளுக்கு பாரிஸும் இடம் தர வேண்டும் என இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.
"இது உண்மையான ஆனந்தம். நிர்வாண விரும்பிகளுக்கு இது இன்னுமொரு சுதந்திரம்" என பாரிஸ் நிர்வாண விரும்பிகள் சங்கத்தை சேர்ந்த ஜூலியன் க்ளாட்-பெனெக்ரி ஏஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
- 'நிர்வாணத்தை பாலியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது' : பாரீஸ் ஜாக்சன்
- பிரபல சஞ்சிகையின் அட்டைப்படத்தில் செரீனா 'நிர்வாண போஸ்'
"இந்த நகரம் திறந்த மனதுடன் இருப்பதை இது காட்டுகிறது. நிர்வாணம் குறித்து மக்களின் அணுகுமுறை, எங்களின் மதிப்புகள் மற்றும் இயற்கைக்கான நமது மரியாதை ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த இது உதவும்" எனவும் அவர் கூறுகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பூங்காவை பயன்படுத்தலாம் என அவர் மதிப்பிடுகிறார்.
அதே சமயம் இத்திட்டம் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. கடந்த வருடம் இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது ஒரு அரசியல்வாதி இதனை "பைத்தியக்காரத்தனம்" என விமர்சித்தார்.
பாரிஸில் ஏற்கனவே ஒரு நிர்வாண பொது நீச்சல் குளம் உள்ளது. நிர்வாண விரும்பிகள், வாரத்திற்கு மூன்று முறை அங்கு நிர்வாணமாக நீந்தலாம்.
பிற செய்திகள்:
- எடப்பாடி அரசு பலத்தை நிரூபிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
- பேனசீர் பூட்டோ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் விடுதலை
- மதுரையில் 'ப்ளூ வேல்' கணினி விளையாட்டுக்கு ஒருவர் பலி
- ஹ்யூஸ்டன்: தொழிற்சாலை வெடித்து ரசாயனங்கள் வளிமண்டலத்தில் கலப்பு
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications