நேபாளம்: மாயமான விமானம் காத்மாண்டு அருகே எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு .. 23 பேரும் பலி
காத்மாண்டு: நேபாளத்தில் 23 பேருடன் மாயமான சிறிய ரக விமானம் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போகோரா என்ற நகரில் இருந்து 23 பேருடன் தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று ஜோஸோமுக்கு கிளம்பியது.

போகோராவில் இருந்து ஜோஸோம் செல்ல 18 நிமிடம் ஆகும். இந்நிலையில் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் மாயமானது. போகோரா மற்றும் ஜோஸோம் இடையே விமானம் தரையிறங்கும் வசதி இல்லை.
இந்நிலையில் மியாக்தி மாவட்டத்தில் உள்ள தானா கிராமம் அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் விமானம் எரிந்த நிலையில் கிடந்ததை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். விமானத்தின் பாகங்கள் 200 மீட்டர் தொலைவில் சிதறிக் கிடந்தன.
விமானத்தில் இருந்த 20 பயணிகள் மற்றும் 3 சிப்பந்திகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்தவர்களில் 2 பேர் குழந்தைகள். பயணிகளில் ஒருவர் குவைத்தை சேர்ந்தவர், மற்றொருவர் சீனாவை சேர்ந்தவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications