பைலட் சீட்டில் நாற்றம்.. அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் இருந்து குதித்து தப்பிய பயணிகள்

அமெரிக்காவில் அவசரமாகத் தரையிறங்கிய விமானத்தின் அவசரக் கதவுகள் வழியே பயணிகள் குதித்து வெளியேறியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அவசரமாக தரையிறக்கப் பட்ட விமானத்தில் இருந்து, உயிருக்கு பயந்த விமானிகள் குதித்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டல்லாசில் இருந்து போனிஸ் நகருக்கு 140 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்திலேயே விமானத்தில், விமானியின் இருக்கைப் பகுதியில் ஒரு விதமான துர்நாற்றம் கிளம்பியது.

passengers leap from wing of plane after emergency landing

இதனால், பீதியடைந்த விமான ஊழியர்கள் உடனடியாக பயணிகளை உஷார் படுத்தினர். பின்னர் அவ்விமானம் அல்புகுயர்கியூ சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்குவதற்காக அனுமதி பெற்றது.

விமான நிலையத்தை விமானம் அடைந்ததும், விமானத்தின் அவசரக் கதவுகள் தயாராக திறக்கப்பட்டன. ஆனால், ஏற்கனவே உயிர் பயத்தில் இருந்த பயணிகள், விமானம் முழுவதும் தரையிறங்கும் வரை காத்திருக்கவில்லை. விமானம் 8 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, அதன் இறக்கைப் பகுதியில் இருந்த அவசர வாசல் வழியாக சிலர் வெளியேக் குதித்தனர்.

உயிர் பயத்தில் அவர்களுக்கு உயரம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. இதனை அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், 'உயிர் பயத்தில் எங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருந்து குதித்தோம் என தெரியவில்லை. குதித்த பிறகுதான் இறக்கை பகுதியில் 8 அடி உயரத்தில் இருந்து தரையில் குதித்தோம் என தெரிந்தது. இது மிகவும் பிரமிப்பாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+