புல்லட் ரயிலில் உள்ளே புகுந்த மல்யுத்த வீரர்கள்.. WWE ஸ்டைலில் பரபர மேட்ச்.. அதிர்ந்து போன பயணிகள்
டோக்கியோ: ஓடும் புல்லட் ரயிலில் திடீரென இரண்டு WWE வீரர்கள் மோதிக் கொண்டால் எப்படி இருக்கும். அப்படி இரண்டு மல்யுத்த வீரர்கள் ஓடும் ரயிலில் மோதிக் கொல்லும் வீடியோ தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஜப்பானில் அரங்கேறியுள்ளது. ஜப்பானில் இருக்கும் அதிவிரைவு புல்லட் ரயிலில்தான் இந்தச் சம்பவம் நடந்தது. அங்கே ஓடும் ரயிலில் இரண்டு புரோபஷனல் மல்யுத்த வீரர்கள் மோதிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மோதல்: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள டிடிடி ப்ரோ என்ற நிறுவனம் தான் இந்த சண்டையை ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக புல்லட் ரயிலில் ஒரு பெட்டியை அவர்கள் வாடகைக்கும் எடுத்துள்ளனர். இந்த போட்டியைப் பார்ப்பதற்கான டிக்கெட்களை அந்த நிறுவனமே விற்றது. மொத்தம் 75 டிக்கெட்கள் மட்டுமே இருந்த நிலையில், அவை அத்தனையும் வெறும் 30 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து நகோயாவுக்கு ஷிங்கன்சென் நகருக்குச் சென்ற புல்லட் ரயிலில் கடந்த வாரம் நடந்த இந்தப் போட்டி நடந்துள்ளது. இந்த மோதலின் வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஓடும் ரயிலாக இருந்தாலும் கூட இரண்டு பேரும் மாறி மாறி மோதிக் கொள்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த அந்த சின்ன இடத்தில் அவர்கள் செய்த ஸ்டன்ட்கள் பலரையும் வியக்க வைப்பதாக இருந்தது.

30 நிமிடங்கள்: இந்த மோதலை அங்கிருந்த அனைத்து பயணிகளும் ரசித்தனர். மேலும், அவர்கள் இதை வீடியோவாக பதிவு செய்யவும் அவர்கள் தவறவில்லை. இந்த மோதல் சுமார் 30 நிமிடங்கள் நீட்டித்தாக கூறப்படுகிறது.
WWEவை போலவே ஜப்பானிலும் மல்யுத்தத்திற்கு மி பெரியளவில் வரவேற்பு இருக்கிறது. WWE புகழ் ஹல்க் ஹோகன் முதல் கர்ட் ஆங்கிள் வரை பலரும் ஜப்பான் நாட்டு மக்கள் மத்தியில் சண்டையிட்டுள்ளனர். அந்தளவுக்குப் பல ஆண்டுகளாகவே அங்கே மல்யுத்தம் மிகவும் பேமஸாகவே இருந்து வருகிறது.
சுமோ: ஜப்பானில் இதுபோன்ற தொழில்முறை மல்யுத்தத்தைப் போலவே சுமோ மல்யுத்தத்திற்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த சுமோ போட்டிகளைத் தவறாமல் கண்டு ரசிப்பார்கள். கடந்த மாதம் இதேபோல டோக்கியோவில் உள்ள ஒரு உணவகத்தில் இரண்டு சுமோ வீரர்கள் மோதிக் கொண்டனர். அதற்கும் கூட மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
— Rasslin' (@RasslinClips) September 18, 2023
இது மட்டுமின்றி அங்கே சுமோ ஸ்டைல் உணவகம் ஒன்றும் இருக்கிறது. இங்கே பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் தான் வருவார்களாம். அங்கே அவர்கள் உணவைச் சாப்பிட்டுக் கொண்டே சுமோ சண்டையைக் கண்டு ரசிக்கலாம். மேலும், அவர்களுடன் ஆட்டோகிராப், போட்டோவும் எடுத்துக் கொள்ளலாம். அங்குள்ள முன்னாள் சுமோ வீரர்களை இதற்காக அந்த ஹோட்டல் நிர்வாகம் பணிக்கு எடுத்துள்ளது. இதற்காகச் சுற்றுலாப் பயணிகளிடம் அவர்கள் 76 டாலர் வரை கட்டணமாகவும் வசூலிக்கிறார்களாம்.
இப்படி சுற்றுலாப் பயணிகள் வரை அவர்கள் புது புதுசா யாருமே நினைத்துக் கூட பார்க்காத இடங்களில் எல்லாம் சண்டையை ஏற்பாடு செய்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications