ஜெர்மனியில் பயங்கரம்: மருத்துவமனையில் டாக்டரை சுட்டுக் கொன்ற நோயாளி
பெர்லின்: ஜெர்மனியில் உள்ள பெஞ்சமின் பிரான்க்லின் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் டாக்டரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார்.
ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஸ்டெக்லிட்ஸ் மாவட்டத்தில் உள்ளது பெஞ்சமின் பிரான்க்லின் பல்கலைக்கழக மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் இன்று காலை 11 மணிக்கு நோயாளி ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டாக்டர் ஒருவரை நோக்கி சுட்டார்.

இதில் படுகாயம் அடைந்த டாக்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 2 மணிநேரம் கழித்து அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதற்கிடையே டாக்டரை சுட்ட அந்த நோயாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கும், தீவிரவாதத்திற்கும் தொடர்பு இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மருத்துவமனையில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications