2 கால்பந்து மைதான அளவிற்கு விமானம்.. ராக்கெட் அனுப்ப புதிய தொழில்நுட்பம்.. கலிபோர்னியாவில் சாதனை
Recommended Video

கலிபோர்னியா: உலகிலேயே பெரிய விமானம் கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பால் ஆலன் என்பவரின் நிறுவனம் இந்த விமானத்தை வடிவமைத்து இருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பின் இவரது நிறுவனம் மீண்டும் விமான தயாரிப்பில் இறங்கி இருக்கிறது. ஆனால் இந்த விமானம் பயணிகள் பயணிப்பதற்கு இல்லை என்பதுதான் இதில் சிறப்பம்சம்.
பல முக்கிய காரணங்களுக்காக இந்த விமானம் இப்போது உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக ஸ்டர்டோ லான்ச் என்ற தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பெரிது
இந்த விமானம் இரண்டு பெரிய கால்பந்து மைதான அளவிற்கு இருக்கும். இதில் ஒரு விமான வடிவமைப்பிற்கு பதிலாக இரண்டு விமானங்கள் இணைத்து போன்ற அமைப்பில் இருக்கும். 6 என்ஜின்கள் இருக்கும். ஆனால் இதன் திறன் 12 என்ஜின்கள் அளவிற்கு இருக்கும்.

ஏன் செய்கிறார்கள்
இதன் நடுவில் மூன்று ராக்கெட்டுகளை வைக்க முடியும். அதன் மூலம் இந்த ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ முடியும். இரண்டு விமானத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் இந்த மூன்று ராக்கெட்டுகளை பொறுத்து வைத்து விண்ணில் ஏவ முடியும்.

எப்படி நடக்கும்
இந்த ராக்கெட்டுகளை சுமந்து கொண்டு இந்த விமானம் விண்ணில் செல்லும். விண்ணில் குறிப்பிட்ட உயரம் சென்ற பின் இந்த ராக்கெட் வெளியே விடப்படும். பின் அது ஆன் செய்யப்பட்டு அங்கிருந்து பூமியைவிட்டு வெளியே செல்லும். இதன் மூலம் குறைவான செலவில் விண்ணில் சாட்டிலைட்களை ஏவ முடியும்.

இன்னும் இருக்கிறது
இதன் முதற்கட்ட சோதனை இப்போது முடிந்து இருக்கிறது. இது வெளியே எடுத்து வரப்பட்டு வேகமாக இயங்க வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதன் உண்மையான பணி சாட்டிலைட் ஏவுவது மட்டுமல்ல என்றும் நிறைய பணிகள் இதற்கு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications