காரா அது?, அதனால் தான் என் அப்பா பலியானார்: போர்ஷா நிறுவனம் மீது நடிகர் பால் வாக்கரின் மகள் வழக்கு
கலிபோர்னியா: ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் மரணம் குறித்து அவரது மகள் மெடோ போர்ஷா கார் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் ஹாலிவுட் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் பால் வாக்கர். அவர் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டா கிளாரிடாவில் தனது நண்பர் ரோஜர் ரோடாஸுடன் 2005ம் ஆண்டு மாடல் போர்ஷா கரேரா ஜிடி காரில் சென்றார்.
காரை ரோஜர் ஓட்டினார். இந்நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரங்களின் மீது மோதி பின்னர் மின் கம்பம் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த ரோஜர், பால் வாக்கர் ஆகிய இருவரும் உடல் கருகி பலியாகினர்.

மெடோ வாக்கர்
பால் வாக்கர் இறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அவரது மரணம் தொடர்பாக அவரின் 16 வயது மகள் மெடோ வாக்கர் போர்ஷா நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

போர்ஷா
போர்ஷா கரேரா ஜிடி காரில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. அதன் டிசைனில் பல தவறுகள் உள்ளன. அதனால் தான் கார் தீப்பிடித்து எரிந்தது. போர்ஷா நிறுவனம் காரை முறையாக தயாரித்திருந்தால் என் தந்தை இறந்திருக்க மாட்டார் என மெடோ தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான கார்
போர்ஷா கரேரா ஜிடி ஒரு ஆபத்தான கார். தெருவில் ஓட்டிச் செல்ல அது லாயக்கு இல்லை. காரில் உள்ள தவறுகளால் தான் பால் வாக்கர் பலியானார் என்று மெடோவின் வழக்கறிஞர் ஜெப் மிலன் தெரிவித்துள்ளார்.

தாறுமாறாக ஓட்டி
பால் வாக்கர் பலியானதற்கு ஓவர் ஸ்பீட் மற்றும் தாறுமாறாக ஓட்டியது தான் காரணம் என்று ஏற்கனவே விசாரணையில் தெரிய வந்துள்ளது என போர்ஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications