எலிவேட்டரில் மலர்ந்த காதல்.. 3வது திருமணத்திற்குத் தயாராகும் பீலே.. 42 வயது காதலியுடன்!
ரியோ டிஜெனீரோ: பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் 3வது முறையாக திருமணம் செய்யவுள்ளார். அவர் திருமணம் செய்யப் போவது 42 வயதான மார்சியா சிபெல் அயோக்கி ஆவார்.
அயோக்கியை கடந்த 6 வருடமாக சீரியஸாக காதலித்து வருகிறார் பீலே. இவர்களது திருமணத்தை பிரேசில் நாட்டவர் ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளனர்.
இருவரும் கடந்த 6 வருடமாக டீப்பாக காதலித்து வந்தனர். இந்தக் காதல் இப்போது திருமணத்தில் முடியப் போகிறது.

2012 முதல்
2012ம் ஆண்டு முதல் பீலேவுடனேயே கிட்டத்தட்ட இருக்கிறார் அயோக்கி. பீலே போகும் இடமெல்லாம் இவரும் கூடவே போகிறார். பொது நிகழ்ச்சிகளிலும் கூட இருவரம் சேர்ந்து பங்கேற்கின்றனர்.

சிகிச்சை பெற்றபோதும்
பீலேவுக்கு பலமுறை உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் கூட அயோக்கி கூடவே இருந்து அவரை கவனித்துக் கொண்டார். இந்த நிலையில்தான் அயோக்கியைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார் பீலே.

3வது திருமணம்
பீலேவுக்கு இது 3வது திருமணமாகும். எனக்கான அன்பை, காதலை நிரந்தரமாக கண்டு கொண்டு விட்டேன் என்று அயோக்கி குறித்துக் கூறியுள்ளார் பீலே.

ஆயிரம் கோல் போட்ட அபூர்வ ஜாம்பவான்
பீலே கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் மேதை ஆவார். மொத்தம் 1363 போட்டிகளில் ஆடி 1281 கோல்களை அடித்த அசகாய சூரர். 3 முறை பிரேசில் அணிக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்த சாதனையாளரும் ஆவார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications