ஆறு மாதகால அமெரிக்க தாக்குதலில் ஆறாயிரம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பலி!
வாஷிங்டன்: அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 6 ஆயிரத்துக்கும் அதிகமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகல் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ராணுவ தலைமையகமாகன பென்டகன் அறிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக துவக்கத்தில் தாக்குதல் நடத்த தயக்கம் காட்டிய அமெரிக்கா, பிற நாடுகளின் வற்புறுத்தலாலும், பாதிக்கப்பட்டோரின் போராட்டங்களாலும் தனது நிலைப்பாட்டை மாற்றி, ஈராக்கில் ஆகஸ்ட் 8ம்தேதி முதலும், சிரியாவில் செப்டம்பர் 23ம்தேதி முதலும், விமான தாக்குதலை தொடங்கியது.

இதனிடையே கடந்த சில மாதங்களாக நடந்துவரும் தாக்குதலில் ஆறாயிரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தலைவர் சக் ஹகேல் தெரிவித்துள்ளார். சடலங்களை எண்ணும் பணி தொடங்கியுள்ளதாகவும் ஹேகல் கூறியுள்ளார்.
அதே நேரம், தாக்குதலில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை இதுவரை பென்டகன் வெளியிடவில்லை.
இதனிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி அளித்த பேட்டியில், "ஆறு மாதங்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதலால் ஐஎஸ்ஐஎஸ் மேற்கொண்டு முன்னேற முடியாமல் முடங்கியுள்ளது.
சுமார் 2 ஆயிரம் வான்வெளி தாக்குதல்களை நடத்தி, 700 சதுர கிலோமீட்டர் நிலத்தை மீட்டுக் கொடுத்துள்ளோம். தீவிரவாதிகளின் முக்கியமான நிலைகள் மீது தாக்குத்ல நடத்தியுள்ளோம். இதில் தீவிரவாதிகளின் ராணுவ மையங்கள், எரிபொருள் நிரப்புமிடங்களும் அடங்கும். இதன் காரணமாக, தீவிரவாதிகளின் கரங்கள் நீளாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கெர்ரி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications