சீனாவை விட மூன்றில் ஒரு பங்கு நிதியை மட்டுமே பாதுகாப்புக்கு செலவிடும் இந்தியா
வாஷிங்டன்: சீனா தனது பாதுகாப்புக்கு செலவிடும் தொகையில் மூன்றில் ஒரு பங்கைத்தான் இந்தியா செலவிடுவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. உடனடியாக சீனா இத்தகவலை மறுத்துள்ளதுடன், அண்டை நாடுகளுடன் சுமுகமாக செல்லவே சீனா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

பென்டகன் அறிக்கையில் அம்பலம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு ராணுவ தலைமையகம் பென்டகன் ஆண்டுதோறும் பிற நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். இந்தாண்டுக்கான அறிக்கையை பென்டகன் நேற்று அமெரிக்க காங்கிரசில் தாக்கல் செய்தது. அது தாக்கல் செய்த அறிக்கையில் ஆசிய நாடுகளின் ராணுவ செலவீனங்கள் தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா கொஞ்சம்தான்
பென்டகன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ செலவீனம் பற்றிய தகவல்கள் உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "சீனா 2013ம் ஆண்டு பாதுகாப்பு திட்டங்களுக்காக 119.5 பில்லியன் டாலர்களை அதாவது, இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் கோடியை ஒதுக்கியிருந்தது. ஆனால் அதே ஆண்டு இந்தியா 39.2 பில்லியன் டாலர்களை அதாவது, ரூ.2.32 லட்சம் கோடிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது.

ரஷ்யாவும் பரவாயில்லை
ரஷ்ய நாடு 2013ம் ஆண்டு பாதுகாப்புத்துறை திட்டத்துக்கு 69.5 பில்லியன் டாலர்களையும், ஜப்பான் 56.9 பில்லியன் டாலர்களையும், தென்கொரியா 41.8 மில்லியன் டாலர்களையும் ஒதுக்கியிருந்தன.

இந்திய-சீன எல்லையில் பதற்றம்
இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் மேம்பட்டுள்ளபோதிலும், இரு நாடுகளுக்கிடையே அருணாச்சல பிரதேசத்திலுள்ள நாலாயிரத்து 57 கிலோமீட்டர் தொலை உள்ள எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

சீனா அவசர மறுப்பு
அருணாச்சல பிரதேசத்தை திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இருப்பினும் சீனாவைவிட இந்தியா, தனது பாதுகாப்புக்கு குறைந்த அளவு நிதியையே ஒதுக்கியுள்ளது" என்று பென்டகன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. அதே நேரம் அமெரிக்காவின் அறிக்கை அம்சங்களை சீனா மறுத்துள்ளது. அண்டை நாடுகளுடன் சீனா பதற்றத்தை ஏற்படுத்திவருதுபோன்ற தோற்றத்தை இந்த அறிக்கை அளிப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

இரும்புத் திரை நாடு
சீனாவின் நடவடிக்கைகள் குறிப்பாக, ராணுவரீதியிலான நடவடிக்கைகள் பிற நாடுகளுக்கு தெரியாமல் மேற்கொள்ளப்படுவதால் அது இரும்புத் திரை நாடு என்று வர்ணிக்கப்படுகிறது. இருப்பினும் அமெரிக்கா எப்படியோ அதை கண்ட்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்துவிட்டது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications