வறுமையால் தந்தை தற்கொலை... மக்களுக்காக பிணைக் கைதி... எஸ்.ஆர். நாதனின் அறியப்படாத பக்கங்கள்
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் அதிபரும் அந்த தேசத்தின் 2-வது தந்தை எனவும் போற்றப்படும் மறைந்த தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன் இளமையில் வறுமையாலும் பின்னாளில் அரசுப் பொறுப்பில் இருந்த காலத்தில் மக்களுக்காக தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாகவும் இருந்த வரலாறு இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

- 1924ம் ஆண்டு செல்லப்பன் அபிராமி தம்பதிக்கு பிறந்தவர் எஸ்.ஆர். நாதன்.
- வறுமையால் நாதனின் தந்தை மலேசியா ரப்பர் தோட்டத்தில் குமாஸ்தா வேலை பார்த்தவர்
- ஆனால் குடும்பத்தை காப்பாற்ற முடியாத நிலையில் எஸ்.ஆர். நாதனின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
- தந்தையின் தற்கொலைக்குப் பின்னர் நாதனின் குடும்பம் மீண்டும் சிங்கப்பூருக்கே திரும்பியது.
- வறுமையுடன் போராடி உயர்கல்வியை நிறைவு செய்தார் எஸ்.ஆர். நாதன்
- 1955ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் அரசில் பல்வேறு துறைகளில் பணி புரிந்தார்.
- 1974ம் ஆண்டு சிங்கப்பூர் பாதுகாப்பு, புலனாய்வுத்துறை தலைவராக எஸ்.ஆர்.நாதன் பணிபுரிந்த போது சிங்கப்பூருக்கு சொந்தமான புலாவு புகாம் தீவில் இருந்த எண்ணெய் கிடங்கு மீது ஜப்பான் ரெட் ஆர்மி, பாலஸ்தீன விடுதலை முன்னணியினர் தாக்குதல் நடத்தினர்.
- சிங்கப்பூரில் இருந்து வியட்நாமுக்கு செல்லும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தும் நோக்கத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது எண்ணெய் கிடங்கில் இருந்த பணியாளர்கள் பிணைக் கைதிகளாக சிக்கினர்.
- பிணைக் கைதிகளுடன் தீவிரவாதிகள் மத்திய தரைக்கடல் நோக்கி புறப்பட சிங்கப்பூர் கடற்படை மடக்கியது.
- ஆனால் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனில் தாங்கள் குவைத்துக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது தீவிரவாதிகளின் நிபந்தனை.
- தீவிரவாதிகளின் நிபந்தனைப் படி நான் பிணைக் கைதியாக வருகிறேன்; மக்களை விடுவிக்குமாறு நாதன் வேண்டுகோள் வைத்தார்.
- இதன்படி தீவிரவாதிகளுடன் 13 நாள் பிணைக் கைதியாக இருந்து பின்னர் நாடு திரும்பினார் நாதன்.
- சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவுக்கு நெருக்கமானவராகவும் இருந்ததால் 2-வது தந்தையாக போற்றப்பட்டவர் அதிபர் நாதன்.
- மறைந்த எஸ்.ஆர். நாதனின் உடலுக்கு நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
- வெள்ளிக்கிழமை மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
- மக்களுக்காக வாழ்ந்த மாமனிதர்!
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications