வட்ட வடிவில் ”பிங் பாங்” கோழி போட்ட முட்டை – ஈபேயில் ரூ 45,000க்கு ஏலம்!
லண்டன்: இங்கிலாந்தில் கோழி ஒன்றின் வட்டவடிவ முட்டை ரூபாய் 45 ஆயிரத்திற்கு ஈபே மூலமாக விற்பனை ஆகியுள்ளது.
இங்கிலாந்தின் லட்சிங்டன்னில் வசித்து வருபவர் கிம் பிராட்டன். அவரது தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் அவரது கோழிகளில் செல்லமாக வளர்ந்து வந்த பிங் பாங் அதிசயமாக பந்து போல வட்ட வடிவத்தில் முட்டையிட்டது.

ஆச்சர்யத்தில் வாயடைத்து போன கிம் இந்த முட்டையை ஆன்லைனில் விற்க முடிவு செய்தார். பின்னர் ஈபே வெப்சைட்டில் விற்பனைக்கு விளம்பரம் செய்தார். அதை பார்த்து பலர் வாங்குவதற்கு முன்வந்தனர். குறிப்பாக, 64 பேர் ஏலம் கேட்பது போல மாறி, மாறி அதிக விலைக்கு கேட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் அந்த அதிசய முட்டையை வாங்கி பாதுகாக்கவே முடிவு செய்திருந்தனர். இறுதியாக ஒருவருக்கு ரூபாய் 45 ஆயிரம் (480 பவுண்டுகள்) விலைக்கு விற்கப்பட்டது. வாங்கியவரின் விபரம் தெரியவில்லை.
அந்த முட்டையை விற்ற பணத்தை அவரது நண்பரின் மகன் நோயால் இறந்ததன் நினைவாக சிஸ்டிக் பிப்ரோசிஸ் என்ற டிரஸ்ட்டுக்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications