"கெமிஸ்ட்ரி" பிடிக்குமா.. அப்ப உங்களுக்கு இது ஸ்வீட்டான நியூஸ் பாஸ்!
டோக்கியோ: பீரியாடிக் டேபிள் எனப்படும் தனிம அட்டவணையில் புதிதாக நான்கு தனிமங்களை அறிவியலாளர்கள் சேர்த்துள்ளனர்.
அறிவியலின் மிகப் பழமையான அடிப்படை தனிம அட்டவணை பீரியாடிக் டேபிள். தற்போது இதில் புதிதாக 113, 115, 117, 118 ஆகிய இடங்களில் புதிய தனிமங்களை சேர்த்துள்ளனர். அதாவது டேபிளின் 7வது வரிசையில் இவை சேர்ந்துள்ளன.
டிசம்பர் 30ம் தேதி நடந்த சர்வதேச பியூர் அப்ளைட் கெமிஸ்ட்ரி கருத்தரங்கில் நடந்த தீவிர ஆய்வு மற்றும் விவாதத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அடையாளமில்லை...
இருப்பினும் இந்தப் புதிய தனிமங்களின் பெயர்களும், அடையாளமும் வெளியிடப்படவில்லை. இந்தப் புதிய தனிமங்களை ஜப்பான், ரஷ்யா, அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. விரைவில் இந்த புதிய தனிமங்களுக்கு பெயரும், அடையாளமும் தரப்படும்.

செயற்கையானவை...
இந்த புதிய தனிமங்கள் நான்கும் இயற்கையானவை அல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்டதே. கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்தப் புதிய தனிமங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வந்தன. தற்போது அனைத்து சோதனைகளிலும் இந்த நான்கு தனிமங்களம் பாஸ் ஆகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பீரியாடிக் டேபிளில் இவற்றுக்கு இடம் கிடைத்துள்ளது.

விரைவில் பெயர்...
இந்தப் புதிய தனிமங்களுக்கு நாடு அல்லது தாது அல்லது விஞ்ஞானியின் பெயர் என ஏதாவது ஒன்றை அடிப்படையாக வைத்து பெயிரடப்படும்.

தற்காலிகப் பெயர்...
தற்போதைக்கு 113வது தனிமத்திற்கு யுனன்ட்ரியம் (ununtrium). 115வது தனிமத்திற்கு யுனன்பென்டியம் (ununpentium) 117வது தனிமத்திற்கு யுனன்செப்டியம் (ununseptium) மற்றும் 118வது தனிமத்திற்கு யுனன்ஆக்டியம் (ununoctium) என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications