காசநோயை குணப்படுத்துமா இந்த வெங்காயம்?
காசநோயை குணப்படுத்தும் ஆற்றல் ஒரு வகை வெங்காயத்திற்கு இருப்பதாக ஆய்வொன்று கூறுகிறது.
ஒரு வகை பெர்சிய வெங்காயத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் சாரானது, காசநோய்க்கு கொடுக்கப்படும் மருந்திற்கு வலுசேர்ப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
2016 ஆம் ஆண்டு கணக்குப்படி தீவிரமான காச நோயால், 4,90,000 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மருந்து கொடுத்தும் பலன் இல்லாத அளவுக்கு தீவிரமான காச நோய் இவர்களுக்கு இருக்கிறது. இந்த புதிய ஆய்வானது, அவர்களை குணப்படுத்த உதவும்.
- வனத்தில் பதுங்கி வாழ்ந்த இந்தியாவின் ராபின் ஹூட்
- வாட்ஸ் ஆப் வணிக செயலி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஆனால், இந்த ஆய்வு ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கிறது. மருத்துவ சோதனை இன்னும் செய்ய வேண்டி இருக்கிறது.
இரான் உணவு
இரான் உணவில் பிரதானமானதாக இருக்கும் ஒருவகை வெங்காயத்திலிருந்து நான்கு விதமான மூலகூறுகளை எடுத்து ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர்.
இந்த ஆராய்ச்சியை பிர்க்பெர்க், லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியும் இணைந்து மேற்கொள்கிறது.
இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த பிர்க்பெர்க் கல்லூரியின் உயிரியல் துறையைச் சேர்ந்த டாக்டர் சஞ்சீப் பக்தா, "உலகளவில் காசநோயை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், 2016 ஆம் ஆண்டு மட்டும் காசநோயால் 2 மில்லியன் பேர் இறந்துள்ளனர். 10 மில்லியன் பேர் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்கிறார்.
படைப்பூக்கம் நிறைந்த வேதியிலாளர்
இந்த ஆய்வில் பங்கெடுத்த பேராசிரியர் சைமன் கிப்பான்ஸ், "இயற்கை ஒரு ஆச்சர்யமான படைப்பூக்கம் நிறைந்த வேதியிலாளர். இந்த பெர்சிய வெங்காயம் போன்ற செடிகள், சூழலில் உள்ள நுண்ணுயிர்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக இயற்கையாகவே தேவையான வேதிகளை உற்பத்தி செய்கிறது."
பரிசோதனை கூடத்தில் பரிசோதிக்கப்பட்ட இந்த மூலகூறுகளை, ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ஆண்டிபயாடிக் மருந்துடன் சேர்த்து காசநோய்க்கான புதிய மருந்தினை உருவாக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பிற செய்திகள்:
- ஒரு பெண்ணான நான் இன்னொரு பெண்ணுடன் வாழ ஏன் முடிவு செய்தேன்? #HerChoice
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- ஆப்கானிஸ்தான்: துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications