இங்க எல்லாரும் ‘சிஎம்’ நாற்காலிக்கு ஆசைப்பட்டா.. அங்க சத்தமில்லாம ஒரு நடிகர் ‘பிஎம்’ ஆகி இருக்காரு!

Subscribe to Oneindia Tamil

லிமா: பெரு நாட்டின் புதிய பிரதமராக பிரபல நடிகர் சால்வடார் டெல் சோலார் பதவியேற்றுள்ளார்.

தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள அழகிய நாடுகளில் ஒன்று பெரு. அமேசான் மழைக்காடுகள் மற்றும் பசுமை நிறைந்த மச்சுபிச்சு மலைத்தொடர்கள் என பயணிகளுக்கு மிகவும் பிடித்த சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

இந்நாட்டின் அதிபராக இருந்த பிரதமர் சீசர் வில்லனுயேவா, கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலார்(48) அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

peru president vizcarra swears in actor as new prime minister

முன்னதாக சீசர் வில்லனுயேவா பிரதமராக பதவி வகித்த போது, அவரது அமைச்சரவையில் கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சால்வடார்.

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ஆல்பர்ட்டோ பியூஜிமோரி-க்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை அவர், கடந்த 2017-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். பின்னர் சால்வடாரின் கோரிக்கைக்கு ஏற்ப ஆல்பர்ட்டோவின் பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்ட்டின் விஸ்காரா வெற்றி பெற்றார். அவர் கடந்தாண்டு மார்ச் மாதம் பதவியேற்றதைத் தொடர்ந்து, சீசர் வில்லனுயேவா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+