பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்
வாஷிங்டன்: பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) முதற்கட்டமாக இதன் அளவை ரிக்டர் அளவுகோலில் 8.2 என பதிவு செய்துள்ளது. இதையடுத்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் சில கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் கடலோர பகுதிகளை சுமார் 3 மீட்டர் உயரத்தில் அலைகள் தாக்கும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. இந்தோனேசியா, மலேசியாவிலும் கடல் அலைகள் 1 மீட்டர் உயரை எழுந்து ஆக்ரோஷமாக இருக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் இருக்கும் மக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், நிலநடுக்கம் 8.2 அளவில் பதிவானதாக கூறிய அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம், பின்னர் அதனை குறைத்து 7.8 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாக கூறியுள்ளது. அமெரிக்க கடலோர பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளது. அலைகள் சீற்றம் கடுமையாக இருக்கும் என்பதால் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் எச்சரித்துள்ளன.












Click it and Unblock the Notifications