போய் வா பில் ஹியூக்ஸ்.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய ஆஸ்திரேலியா!
மாக்ஸ்வில்லி, ஆஸ்திரேலியா: மறைந்த கிரிக்கெட் வீரர் பில் ஹியூக்ஸ் இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஹியூக்ஸுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வேகமாக வந்த பவுன்ஸர் பந்து தலையில் மோதியதில், படுகாயமடைந்த பில் ஹியூக்ஸ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மரணம் ஆஸ்திரேலியர்களை மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களையும் உலுக்கியுள்ளது.

மாக்ஸ்வில்லி கிராமத்தில்
ஹியூக்ஸின் இறுதிச் சடங்குகள் இன்று அவர் பிறந்த ஊரான மாக்ஸ்வில்லி கிராமத்தில் நடந்தது.

ஹியூக்ஸ் பிறந்த ஊர்
அழகிய எழில் கொஞ்சும் கடலோர கிராமம்தான் மாக்ஸ்வில்லி. அங்குதான் ஹியூக்ஸ் பிறந்தார்.

இறுதி ஊர்வலம்
மொத்தமே 3000 பேர் வரைக்கும்தான் இந்த சிறிய கிராமத்தில் வசிக்கிறார்கள். இங்குள்ள பள்ளி ஒன்றில்தான் ஹியூக்ஸின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து பின்னர் இறுதி ஊர்வலம் கிளம்பியது.

கிரிக்கெட் வீரர்கள்
ஹியூக்ஸின் இறுதி ஊர்வலத்தில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் உள்ளிட்டோர் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி
5000க்கும் மேற்பட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். ஹியூக்ஸின் இறுதி ஊர்வலத்தின்போது கிராமத்தினர் மொத்தமாக திரண்டு வந்து இரு பக்கமும் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மைக்கேல் கிளார்க்
ஹியூக்ஸின் சிறந்த நண்பரும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனுமான மைக்கேல் கிளார்க் பெரும் சோகத்துடன் ஹியூக்ஸின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். ஹியூக்ஸின் சவப் பெட்டியையும் அவர் சுமந்து சென்றார்.

ஆரோன் பின்ச்
ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச், மாக்ஸ்வில்லியைச் சேர்ந்த கோரி அயர்லாந்து உள்ளிட்டோரும் சவப் பெட்டியைச் சுமந்து சென்றவர்களில் சிலர்.

தந்தை கிரகோரி
ஹியூக்ஸின் தந்தை கிரகோரி ஹியூக்ஸ் உள்ளிட்டோரும் சவப் பெட்டியை சுமந்து சென்றவர்களில் அடக்கம்.

தாயார் விர்ஜீனியா
ஹியூக்ஸின் தாயார் விர்ஜீனியா ஹியூக்ஸ், பெரும் சோகத்துடன் தனது மகனின் இறுதிச் ச"ங்கில் கலந்து கொண்ட சோகக் காட்சி.












Click it and Unblock the Notifications