உலகை உறைய வைக்கும் 4 வயது சிறுமியின் புகைப்படம்

Subscribe to Oneindia Tamil

டமாஸ்கஸ்: சிரியாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் கேமராவை பார்த்து துப்பாக்கி என நினைத்து பயத்தில் கை தூக்கி நிற்கும் புகைப்படம் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பிரபலமாகியுள்ளது.

Photojournalist tweets heartbreaking picture of Syrian child

உள்நாட்டு போரால் சீர்குலைந்து போயுள்ள சிரியாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஆதி ஹுதியா என்பவரை உஸ்மான் சாகிர்லி என்ற புகைப்படக் கலைஞர் கடந்த 2012ம் ஆண்டு பார்த்துள்ளார். சிறுமியை பார்த்த உஸ்மான் அவரை புகைப்படம் எடுக்க கேமராவை எடுத்துள்ளார்.

கேமராவைப் பார்த்த சிறுமி அது துப்பாக்கி என நினைத்து பயத்தில் நடுங்கி கைகளை மேலே தூக்கி சரண் அடைந்து நின்றுவிட்டது. இந்த புகைப்படத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் நாதிய அபு ஷபான் என்பவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து நாதியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அவர் கேமரா அல்ல ஆயுதம் வைத்திருக்கிறார் என நினைத்து சிறுமி சரண் அடைந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர். மேலும் பலர் இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்டுள்ளனர். பயந்து நிடுங்கி நிற்கும் சிறுமியின் புகைப்படம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+