வீட்டுக்கு வெளியே நின்ற கார்களும் நொறுங்கின.. மளமளவென பெரும் தீ.. பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில், குடியிருப்பு பகுதியில், விமானம் நொறுங்கி விழுந்ததால், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும், தூள் தூளாகியுள்ளன. சில கார்கள் எரிந்து கருகியுள்ளன. இந்த அதிர்ச்சி ஏற்படுத்தும், வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Recommended Video

    Pakistan flight incident video | விமானி பேசிய ஆடியோ... விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி

    பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், இன்று, லாகூர் நகரில் இருந்து, பாகிஸ்தானின் வர்த்தக தலைநகர் என்று அழைக்கப்படும், கராச்சிக்கு இயக்கப்பட்டது. இதில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர்

    PIA’s Lahore-Karachi flight crashed on a residential area near Karachi airport- video

    கராச்சியில் விமானம் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக, குடியிருப்பு காலனிப்பகுதிக்குள் நொறுங்கி விழுந்துள்ளது. சில நிமிடங்கள் கழித்திருந்தாலும், விமானம் தரையிறங்கியிருக்கும். ஆனால், அதற்குள், இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

    PIA’s Lahore-Karachi flight crashed on a residential area near Karachi airport- video

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்தனர். விமானம், குடியிருப்பு பகுதியில் விழுந்து தீ பிடித்து எரிந்தது. எனவே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சில சேதமடைந்துள்ளன. நொறுங்கியுள்ளன. தீ பிடித்து எரிந்துள்ளன. இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

    இந்த சம்பவத்தில், விமானத்தில் பயணித்த அத்தனை பேரும் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    குடியிருப்பில் விழுந்ததால் மக்கள் பெரும் பீதியடைந்து அங்குமிங்கும் ஓடுகிறார்கள். இந்த காட்சிகளும் வீடியோக்களாக பதிவாகியுள்ளது.


    சில வீடுகளில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்த இடத்தில் இருந்து பெரும் கரும் புகைமூட்டம் எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+