ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னனின் சொகுசு பங்களாவில் தீ
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் மலிபு நகரில் உள்ள ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னனின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
டை அனதர் டே, தி வேர்ல்ட் இஸ் நாட் இனஃப் மற்றும் கோல்டன் ஐ ஆகிய படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தவர் பியர்ஸ் பிராஸ்னன். அவர் தனது மனைவி கீலி ஷாயே ஸ்மித்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கடலோர நகரான மாலிபுவில் வசித்து வருகிறார்.
மாலிபுவில் உள்ள சொகுசு பங்களாவில் அவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் கராஜில் தீப்பிடித்து அது மளமளவென பிற பகுதிகளுக்கு பரவி உள்ளது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்த உடன் 50 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீடு சேதமடைந்துள்ளது. ஆனால் நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ எரிவதை பார்த்த ஒருவர் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். மலிபு நகரில் தான் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications