விமானத்தில் 3 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை: பயணிகளை விமானத்தில் வைத்து பூட்டிய பைலட்
பெர்லின்: ஜெர்மனியில் இருந்து ஸ்பெயினில் உள்ள பால்மா டி மலார்காவுக்கு சென்ற ஏர் பெர்லின் விமானத்தில் 3 வயது சிறுமிக்கு 61 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
ஜெர்மனியில் உள்ள டுசல்டார்ப் நகரில் இருந்து ஏர் பெர்லின் விமானம் ஸ்பெயினில் உள்ள பால்மா டி மலார்காவுக்கு சென்றது. விமானத்தில் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மால்டோவாவை சேர்ந்த 61 வயது முதியவர் 3 வயது மகளுடன் பயணம் செய்த பெண் அருகே அமர்ந்திருந்தார். அந்த பெண் தூங்கிய நேரத்தில் அவரின் 3 வயது மகளை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதை பார்த்த விமான பணிப்பெண் உடனே விமானியிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து விமானி இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஞாயிற்றுக்கிழமை மதியம் விமானம் மஜோர்காவில் தரையிறங்கியது.
போலீசார் அந்த நபரை கைது செய்ய ஏதுவாக அவர்கள் விமானத்திற்குள் நுழையும் வரை யாரும் வெளியே செல்லாதவாறு விமானி விமானத்தின் கதவை பூட்டிவிட்டார். போலீசார் வந்து அவரை கைது செய்து அழைத்துச் சென்ற பிறகே பிற பயணிகள் விமானத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 3 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications