ஆட்டோ பைலட்டில் கோளாறு... ஹைதராபாத் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறக்கம்

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு நேரமே சரியில்லை. ஏற்கனவே இரண்டு விமானங்களையும், அதில் பயணம் செய்த 525 பேரை முழுதாக பறி கொடுத்த நிலையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஹைதராபாத்துக்குக் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது.

இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pilot Turns Malaysia Airlines Flight Around After Defect

கோலாலம்பூரிலிருந்து ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம் இது. விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதற்காக, அதில் உள்ள எரிபொருளை முழுமையாக காலி செய்தவற்காக கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வானில் வட்டமடித்து இந்த விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகலுக்கு மேல் இந்த விமானம் ஹைதராபாத் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் இரண்டு பெரிய ரக போயிங் விமானங்களை முழுதாக பறி கொடுத்துள்ளது மலேசியன் ஏர்லைன்ஸ். 239 பயணிகளுடன் மார்ச் 8ம் தேதி சென்ற எம்எச் 370 விமானம் அப்படியே மாயமாகி விட்டது. அது என்ன ஆனது என்பது இன்று வரை உறுதியாகத் தெரியவில்லை.

அதேபோல ஜூலை 17ம் தேதி உக்ரைன் மீது பறந்து கொண்டிருந்த எம்எச் 17 விமானத்தை உக்ரைன் போராளிகள் சுட்டு வீழ்த்தினர். இதில் 289 பேர் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+