பிங்க் நிறத்தில் ட்ரோன்.. பெண்கள் தினத்திற்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன ஈரான்! இது புதுசா இருக்கே!
தெஹ்ரான்: ஈரானில் பெண்கள் தினம் ஏப்.18ம் தேதி கொண்டாடப்பட்டது. ஈரான் ராணுவம் பெண்கள் தினத்தையொட்டி, பிங்க் நிறத்தில் ட்ரோன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களை எழுப்பியிருக்கிறது.
வழக்கமாக பெண்கள் தினத்திற்கு, சாதனை படைத்த பெண்கள் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். ஆனால், ஈரானில் தற்கொலை ட்ரோன்கள் பிங்க் நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படும். ஆனால், ஈரானில் இஸ்லாமிய நாட்காட்டியின்படி, 8வது இமாமான இமாம் ரெஸாவின் சகோதரி ஹஸ்ரத் மசூமே என்பவரின் பிறந்த நாளைக் குறிக்கும் விதமாக, ஏப்.18ம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக, ஈரானின் மினாப் பகுதியில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த சிறுமிகளின் நினைவாக பிங்க் நிற ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மினாப் பகுதியில் பெண்கள் பள்ளி இருந்தது. இந்த பள்ளியின் மீது அமெரிக்கா கடந்த பிப்.28ம் தேதி ஏவுகணையை வீசி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை ஈரான் மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
இந்த தாக்குதலுக்கு, அமெரிக்கா டொமாஹாக் ரக ஏவுகணையை பயன்படுத்தியிருந்தது. முதலில் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை, சர்வதேச அளவில் அனுதாபம் தேட.. ஈரான் தங்களை தாங்களே தாக்கிக்கொண்டது என்று அமெரிக்கா கூறியிருந்தது. இருப்பினும், பள்ளியின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட டொமாஹாக் ஏவுகணையின் பாகங்கள், அமெரிக்காதான் இந்த தாக்குதலை நடத்தியது என்பதை உறுதி செய்தன. தாக்குதலில் 120 குழந்தைகள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த பின்னணியில்தான், பெண்கள் தினத்தன்று ஈரான் பிங்க் நிற தற்கொலை ட்ரோன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
'இனிய பெண்கள் தின வாழ்த்துகள்' என்ற வாசகத்துடன் இந்த ட்ரோன்களை ஈரான் காட்சிப்படுத்தியிருக்கிறது. இது ஷாஹித் ட்ரோன்கள் ரக ட்ரோன்கள் ஆகும். இவை இலக்கை நோக்கிப் பாய்ந்து சென்று, அதன் மீது மோதி வெடிக்கும் திறன் கொண்டவை. ஈரான்-அமெரிக்கா மற்றும் ஈரான்-இஸ்ரேல் மோதல்களில் இந்த ட்ரோன்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக ரேடாரில் சிக்காமல் சென்று இலக்குகளை தாக்குவதில் இது கெட்டிக்கார ட்ரோன்கள் ஆகும்.
இந்த வகை ட்ரோன்களின் விலை கம்மிதான். ஆனால், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் காஸ்ட்லியானவை. எனவேதான் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் இந்த ட்ரோன்கள் தலைவலியாக இருக்கின்றன.
-
குவைத் ஏர்போர்ட்டில் துடிதுடித்து உயிரிழந்த இந்தியர்.. ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பயங்கரம்! திக்திக் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications