தெலுங்கானா எபெக்ட் போல.. கலிபோர்னியாவை 6 மாநிலங்களாக பிரிக்க கோரிக்கை
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிலிக்கான்வேலி என்றழைக்கப்படும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தை 6 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலம் கலிஃபோர்னியா. மொத்தம் 38 மில்லியன் மக்கள் இம்மாநிலத்தில் வசிக்கின்றனர். இதன் மிகப் பெரிய நகரம் லாஸ் ஏஞ்சல்ஸ்.

அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அளவில் வருமானத்தை தரக்கூடிய சாப்ட்வேர் நிறுவனங்கள் நிறைந்து கிடக்கும் 'சிலிக்கான்வேலி' என்ற பெருமைக்குரிய இந்த கலிஃபோர்னியாவை பல சிறிய மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று அவ்வப்போது கோரிக்கை எழுவது வாடிக்கை.
6 மாநிலங்களாக..
தற்போது இந்த மாநிலத்தை 6 சிறிய மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறார் சிலிக்கான்வேலி முதலீட்டாளர்களில் ஒருவரான டிம் ட்ராபெர். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், கலிஃபோர்னியாவை பிரிக்காவிட்டால் மிகவும் மோசமான நிலையை அடைய நேரிடும். ஒருகட்டத்தில் கலிஃபோர்னியாவே செயலற்று போகும் என்று கூறியுள்ளார்.
சிலிக்கான்வேலி
ட்ராபெர் முன்வைக்கும் 6 புதிய மாநிலங்கள் எப்படி இருக்க வேண்டுமாம் தெரியுமா? சிலிக்கான்வேலி என்ற பெயரில் ஒரு மாநிலம். இதில் ஆப்பிள், கூகுள் போன்ற எண்ணற்ற சாப்ட்வேர் நிறுவனங்கள் இயங்கி வரும் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சான் ஜோஸ் ஆகிய பகுதிகள் இணைக்கப்படும்.
தெற்கு, வடக்கு கலிஃபோர்னியா
ட்ராபெர் வாழும் ஆதெர்டனை உள்ளடக்கி ஒரு சிறுமாநிலம் ஒன்றும் உருவாக வேண்டுமாம். தெற்கு கலிஃபோர்னியா என்ற ஒரு மாநிலத்தை உருவாக்கி அதில் சாண்டிகோ மற்றும் ஆரஞ்ச் கவுன்டி பகுதிகளை சேர்க்க வேண்டும்.
மேற்கு கலிஃபோர்னியா
மேற்கு கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான்டா பார்பரா ஆகியவை இடம்பெற வேண்டும். மத்திய கலிபோர்னியாவில் ஃப்ரெஸ்நோ மற்றும் ஸ்டாக்டன் ஆகியவை இடம் பெறுமாம். வடக்கு கலிபோர்னியாவில் தற்போதைய தலைநகர் சாக்ரமென்டோ இருக்குமாம்.
கையெழுத்து இயக்கம்
இந்த புதிய மாநில பிரிவினைக்கான கையெழுத்து இயக்கத்தை ஜூலை மாதத்துக்குள் நிறைவு செயய்வும் ட்ராபெர் திட்டமிட்டிருக்கிறாராம்.
இந்தியாவின் தெலுங்கானா தாக்கம் ஏழு கடல்தாண்டி போய்விட்டதோ?
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications