அமெரிக்காவில் "பீச்"சில் தரையிறங்கிய விமானம்: வாக்கிங் போன தந்தை பலி - மகள் படுகாயம்
மியாமி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நேற்று ஒரு விமானம் அவசரமாக கடற்கரையில் தரையிற்ங்கும் நிலை ஏற்பட்டது. இதில் கடற்கரையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளானது, 1972 பைப்பர் செரோக்கி ரக சிறிய விமானமாகும். இந்த, விபத்தில் விமானிக்கோ அதில் இருந்தவர்களுக்கோ பாதிப்பு ஏதும் இல்லை என்று சரசோட்டா கவுண்டி செரிப் அலுவலகத்தின் வெண்டி ரோஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்தில் பலியானவர் தன்னுடைய மகளுடன் கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த விமானம் அவசரமாக கடற்கரையில் தரை இறங்கியது. அதில் சிக்கிய தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது பெண் குழந்தை படுகாயமடைந்த நிலையில் பீட்டர்ஸ்பெர்கில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட விமானத்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெனிஸ் விமான நிலைய அதிகாரிகள், சரசோட்டா அலுவலகத்தை தொடர்பு கொண்டு விமானத்தின் அவசர நிலையை தெரிவித்து கடற்கரையில் தரையிறக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து கடற்கரையில் விமானத்தை இறக்க அனுமதி தரப்பட்டது.
ஆனால் அந்த சமயத்தில் கீழே இந்த இருவரும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு சிக்கிக் கொண்டனர்
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications