நடுவானில் 'சீட்' சண்டை: அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கை தொடர்பாக 2 பயணிகள் இடையே ஏற்பட்ட சண்டையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூவார்க் நகரில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டென்வருக்கு கிளம்பியது. விமானம் நடுவானில் பறக்கையில் அதில் இருந்த பயணி ஒருவர் தனக்கு முன்பு இருந்த இருக்கை பின்னால் சாயாதவாறு இருக்க தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தினார். முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்த பெண் பயணி தனது இருக்கையை பின்புறமாக சாய்க்க அது சாயவில்லை.

Plane Diverted after Passengers Fight over Seat Reclining

இதையடுத்து இருக்கை சாயாமல் இருக்கும்படி செய்த அந்த ஆண் பயணியின் முகத்தில் அந்த பெண் பயணி ஒரு கப் தண்ணீரை ஊற்றினார். உடனே அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து விமானி வேறு வழியில்லாமல் விமானத்தை திசை திருப்பி சிகாகோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியதும் சண்டை போட்ட இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் 48 வயதாகும் அந்த இரண்டு பயணிகளை விசாரித்தனர். ஆனால் அவர்களை கைது செய்யவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+