ஸ்ஸப்பா.. ஒரே புழுக்கமா இருக்கே.. கதவை தொறந்து வைப்போம்.. ஆத்தாடி என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே!
விமானத்தின் அவசர வழி கதவை பெண் ஒருவர் திறக்க முயன்றார்
Recommended Video
பெய்ஜீங்: "ஸ்ஸ்ஸுப்பா... என்ன இப்படி புழுக்கமா இருக்கே.." என்று ஒரு பெண் கதவை திறக்க போகவும் எல்லோரும் ஐயோ, அம்மா பயந்து கத்தி அலறிவிட்டனர். ஏனென்றால் அந்த பெண் திறந்தது விமானத்தில் இருக்கும் எக்ஸிட் கதவு அதாவது அவசர வழிக்கதவு!
பொதுவாக எல்லா விமானத்திலும் ஒரு எக்ஸிட் கதவு இருக்கும். பறக்கும் விமானத்தில் திடீரென்று எதாச்சும் ஆபத்து வந்தால், மட்டுமே இந்த கதவு திறக்கப்படும். அதனால்தான் இதற்கு அவசர வழிக்கதவு என்பார்கள்.

இந்த கதவைதான் திறந்து விட்டார் ஒரு பெண். கடந்த 23-ம் தேதி சீனாவின் வூகன் பகுதியில் உள்ள சர்வதேச விமானத்தில் ஷியாமென் ஏர்லைன்ஸ்சிற்கு சொந்தமான ஃபிளைட் ஒன்று கிளம்ப தயாரானது. அதில் வழக்கம்போல் ஏராளமான பயணிகள் உட்கார்ந்திருந்தனர்.
மேலும் சிலர் ஏறிக் கொண்டிருந்தனர். ஃபிளைட் கிளம்ப தயாராகும் நேரத்தில், ஏற்கெனவே உள்ளே உட்கார்ந்திருந்த பெண் பயணி ஒருவர், அங்கிருந்த அவசர வழிக்கதவை திறந்தார். இதை பார்த்த மற்ற பயணிகள் அலறி கத்திவிட்டனர்.
அதற்குள் விமான ஊழியர்கள் இந்த பெண்ணிடம் விரைந்து சென்றுவிட்டனர். ஏன் திறக்கறீங்க என்று அவர்கள் கேட்டதற்கு, "ஒன்னும் இல்லை.. புழுக்கமா இருக்கு.. காத்து வரல.. அதான் திறக்கலாம்ன்னு" என்று காரணம் சொன்னார்.
இதை கேட்டுஅதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், "அப்படியெல்லாம் திறக்கக்கூடாது, இது அவசரகாலத்துக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியது, இப்படி கதவை திறக்கிறது குற்றம்" என்று விளக்கம் தந்து எச்சரித்தனர்.
அது மட்டுமில்லை.. "ஃபிளைட் பறக்கும்போது திரும்பவும் இந்த பெண் கதவை திறந்து விட போகிறார், கொஞ்சம் பார்த்துக்குங்க" என்று அங்கிருந்த மற்ற பயணிகளிடம் ஊழியர்கள் சொல்லிவிட்டு நகர்ந்தனர். இதன் காரணமாகவே இந்த ஃபிளைட் சில மணி நேரம் லேட்டாக கிளம்பி சென்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications