16 பேருடன் போலீஸ் விமானம் மாயம்.. இந்தோனேஷியாவில் பரபரப்பு
இந்தோனேஷியாவில் 16 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானம் தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டு திடீரென மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
ஜகர்தா: இந்தோனேஷியாவில் இருந்து 16 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானம் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர், ஜகர்தாவில் 16 போலீஸ்காரர்களுடன் புறப்பட்ட விமானம் மேற்கு இந்தோனேசியா பதாம் தீவு அருகில் சென்றபோது தகவல் தொடர்பு இணைப்பு துண்டிக்கப்பட்டு திடீரென மாயமானது.

அந்த விமானம் என்ன ஆனது எங்கு சென்றது என்பது குறித்து உடனடியாக தகவல் கிடைக்கவில்லை. அந்த விமானத்தை தேடுவதற்கான தீவிர நடவடிக்கைகளில் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அது போலீசார் மட்டுமே பயணித்த விமானம் என்று தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை இந்தோனேசிய மீட்புக் குழு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications